செவ்வாய்

#திலுக்ஸ்

யார் நினைவில்
யார் செதுக்கிய 
யாரோ வரிகளை..!!
உம் குறலில் 
பாடும் ஓவ்வொரு  
தருணமும்,
என் மனதில் 
எவரோ வரிகளை 
நமதாக்கி கொள்ள தோன்றுது.

#உன்குறலில்_எனக்கான வரிகளை நீங்கள் பாடுகையில் 


புதன்

உச்சிக்குளியல்

உளிகளின் விலாசம்

மிச்சத்தை மட்டும் உண்டு, 
மிஞ்சியதை மட்டும் சேமித்து,     
வீசப்படும் விதைகளுக்கும் 
விலாசம்தரும் பூமாதேவியின் 
அன்பைபோல்..!!!

அடுத்தவர் ஆற்றும் குறைகளில் 
நம் பிழையை உளிகொண்டு செதுக்கி, விடாமுயற்சியுடன் 
சாதனை படைப்போம்..
போதையில் வீழ்ந்தவனுக்கும்..! 
பேதையை சுமந்தவளுக்கும்..!!
புது விடியல் இங்கு பிறக்கும். 

சுமைகளில் வீழ்ந்தும் 
சுகமாய் எழுபவர்கள் நாம்..!!

பேரிடரால் நடுத்தெருவிற்க்கு 
தள்ளப்படுகிறது நடுத்தரவர்க்கம் 
எனும் நம்வாழ்வு??

விடியலைத்தேடி 
விலாசம் தொலைத்தும்..!!

மீட்டுவிட்டேன் 
வீட்டையும் விலாசத்தையும்..!!
 *நம்பிக்கை உளிகளால்* ...

    - மாலதி ராமதாஸ்

மனம் தேடும் மனித நேயம்

சனி

இனிய முதுநெல்லி ..!!

 என் இம்சை பாட்டி!!! 


நிலவை படைத்தவானம் நீ
என் ருக்கு பாட்டி,,,,
 
சேவல் கூவலுக்கும்
காக்கை கரைதலுக்கும்
முன்னெழுந்து ஒலி இடுவாயே (சத்தம் )
அவையே எங்கள்  
இம்சையான இனிய சுப்ரபாதம்..!!!
அதிகாலை சூரியனுக்கும் 
அந்தி மாலை நிலவுக்கும் 
நேரம் காட்டும் கடிகாரமே
உந்தன்பொற்பாதங்கள்,
சுறுசுறுப்பின் -சிகாமணி 
கண்காணிப்பு புகைப்பட 
கருவிகலோ உந்தன் இமைகள் 
 
படிக்காமல் பட்டம் பெறும் மருத்துவச்சி 
எஞ்சியதையும் தானம்செய்து 
கஞ்சியையே புசிக்கும் கொடைவள்ளி 
 
ஓய்வெடுக்கும்
உன் வயதும்(85)
உன் சுறுசுறுப்பில்
ஓய்வெடுக்க மறுக்கிறது..!!
 
மதிமங்கும் வயதிலும் 
மழலையாயும் 
பதினெட்டு வயது 
பட்டாம்பூச்சியாய் 
வலம் வருபவள் 
என் ருக்கு பாட்டி...
 
                                                     
 
 

வெள்ளி

உழவனின் புதிய பாதை,,,


விதை இவன் விவசாயி 

இறைவனிடம் வரம் வாங்கி 
இயற்கையிடம்தோற்று,,
மனம்  தளரா மனதோடு 
மீண்டெழுந்து..!!

பெற்றதை பெற்றவரிடம் திருப்பிக்கொடுப்பதற்குள் 
அவர்கள் பேச்சுகளில் 
இவன் மூச்சி நிற்கிறது..,///
அப்பப்பா அடடா..!! 
அறுவடையிட்டும் குன்றிப்போகிறதே 
இயற்கை சீற்றங்களால் 
பயிறும் வயிறும் வயதும்..!!

முற்றுப்புள்ளியிடாமல் போராடுகிறான்..!!

அவன் வேர்வையில் எரியும் 
தீப ஒலியில்தான் 
இன்றும் இறைவனுக்கே 
தீபாராதனை 
காட்டப்படுகிறது..!!!

இயற்கை முற்றுஇட்டாலும்  
இறைவன் முற்றிடடாலும் 
இவனின் பயணம்  
நம்பிக்கையில் விளைந்த 
விதையிவன் (விதை இவன் விவசாயி)


திங்கள்

தூவல் ரசிகை_எந்தன் தூவலன்!!

என்விரல்களின்தோழனிவன்
எந்தன் தூவலன்..!!

இறைவன் துணையே
 தூவலின் துணைகொன்டுதான்
பிறக்கிறது எழுத்துகளாய்.

என்கவிகள் ஏட்டினில் 
அரங்கேற காகிதங்களில்
யுத்தம்செய்து -குப்பைகளில் 
வீசியெறிந்தவன் 
இலக்கணப்பிழைகளால்..!!

அவன்தொப்பியால்
என்விரல்களை 
கவசமாக்கினான்..!!!

என் இரவுகளின்
இனியதோழநிவன் 
பாராட்டின் சொந்தக்காரன் 
கையடக்கத்திருக்கும் 
பிடித்தஆசைக்காரன்.
எண்ணங்களின் 
மனசாட்சியானவன்..!!

மழலை முதல்
மதிமங்கும்வரை 
உடனிருப்பவன்.
ஒருமுனை(பேனாமுனை) 
புரட்சியாய் 
ஐவிரலோடு -அனைத்தையும் 
ஆட்கொள்கிறாயடா!!!

கூலீயின் கூற்று


கல் உடைத்தும் நிரம்பாத வயிறு 
வீதியோரம் பாடியும் கிடைக்காத வாய்ப்பு
சுமை தூக்கியும் இறங்காத பாரம் 
படித்தும் கிடைக்காத பணிகள் 

ஒருமாத சேவையை ஒருவருடத்திருக்கு பிறகு 
கிடைக்க போகும் லாபத்திற்காக 
முன்பணத்தோடு நட்டத்தை எதிர்நோக்கி 
கடன்களையும் சுகமாய் பெரும் -விவசாயி 


ஒரு ரூபாய் அதிகம்கிடைக்குமென 
சுமக்கும் சுமைகள் உடைந்தது -
மனதோடு எலும்புகளும் 
மருத்துவமனை படுக்கையில் நீங்கள் 

சுயதொழில் முதலீட்டில் இருந்து 
முதல் கிடைத்த முன்பணமாய் 
கடன்கள்..





உன் இரக்கத்தில் மட்டும் பிறப்பதில்லை மனிதநேயம்


இயற்கையின் முதற் படைப்பே மனிதன்
சிட்டுக் குருவியில் துவங்கி செல்லப் பிராணிகள் வரை 
அதன் இனத்திலிருந்து பிரித்து கூண்டில் அடைக்கின்றோம் 
இதுமனிதன் காட்டும்நேயமென கர்ஜிக்கின்றோம்!
 அன்பனைத்தையும் அள்ளித் தந்தவளை,
அனாதை இல்லத்திற்கு தாரை வார்க்கின்றான்
சுமை தாங்கும் பூமா தேவியை,
வேதிப்பொருள் நாடி துளையிடுகின்றான்.
பிறக்காத பிள்ளைக்கு ஏங்கும் தாய்க்கு 
அன்பளிபாய் அழைச்சொல் மலடி
சிப்பிக்குள் முத்தாக,
சிற்பியின்-சிந்தனைக்கேற்ற சிலையாக 
எவ்வுயிரிடத்தும் குறைவில்லா-அன்பை 
நிறைமனதுடன் காட்டுவதன்றோ 
மனித நேயம்!!!!


மனித நேயம்!!!!

அன்பனைத்தையும் அள்ளித்தந்தவளை,
அனாதை இல்லத்திற்கு 
*தாரை வார்க்கின்றான்*

சுமை தாங்கும் பூமா தேவியை,
*வேதிப்பொருள் நாடிதுளையிடுகின்றான்*.

பிறக்காத பிள்ளைக்கு ஏங்கும் தாய்க்கு 
அன்பளிபாய் 
*அழைச்சொல் மலடி*

சிப்பிக்குள் முத்தாக,
சிற்பியின்-சிந்தனைக்கேற்ற 
சிலையாக 
எவ்வுயிரிடத்தும்
குறைவில்லா-அன்பை 
நிறைமனதுடன் காட்டுவதன்றோ 
மனித நேயம்!!!! 

தோழமை


எந்தன் தூண்டுகோல் ஆசானாய்.!
என்னை போதிக்கும் அன்னையாய்..!!
எந்தன் தந்தை பிம்பத்தின் நிழலுமானவனாய்...!!!
நான் துவண்டகணத்தில் தூ வள்பேனாவாய் நின்றாய்..!!
என்சிறுமுயற்சிக்கு நீ மெச்சிபுகழுகையில் 
என்கனவுகளும் துளிர்க்கிறது!!

உன்பிரிவில் நான்மகிழ்ச்சிக்கண்டேன் 
பாசத்தின்ஆழத்தினை அறிந்ததருணமது,!!

வாடியபோதும் தேடியபோதும் 
அன்புக்கவசம்கொண்டு 
அள்ளிஅனைத்துவிட்டிட்டாய்  
அலைபேசியிலே .!!




சிந்தனை தீ

 
இயற்கை..!!

எழிலோவியமாய் கொட்டும் அருவிகள் 
பயிர்களின் தேன்துளிகளாய் மழைச்சாரல்கள்.
உருவமில்லாமல் உணரவைக்கும் காற்று 
ஏழைவீட்டின் அழையாவிருந்தாளியாய் 
எட்டிப்பார்க்கும் கதிரொளி
கிணற்றில் இரவுகுளியல்போடும் நிலா..!
 
மொட்டைபோடும் ஆசைவந்ததும் 
இலையுதிர்காலத்திலே மரங்களுக்கு 
ஓரறிவு பூச்ச்சுகளின்நிழற்குடமாய் 
காளான்களின் தோற்றம்? 
குக்கூ பறவையின் கூவல் 
கிக்கி கிளியின் மழலைப்பேச்சு 
அம்மாஎன்றழைக்கும் ஐந்தறிவு பசுக்கள் 
தவழும் குழந்தையை.
சீரும்பாம்புகள் அழிக்கநினைப்பவர்களை 
அலையவிடும் தேனீக்கள் 
பாட்டியிடம் திருடியும், விரதவுணவுகளை 
அன்போடுஅழைத்து கொடுக்கும் 
படையலும் காக்கைகளுக்கே..

உடலால் மட்டும் உணர்கிறேன் 
-ஓரறிவு உயிர் நான்???

*புல்_ பூண்டு-மரம்*

உடலோடும்  நாக்கினால் உணர்கிறேன் 
ஈரறிவு உயிரும்நான் ???

*மீன் பாம்பு*

உடலோடும் நாக்கும் மூக்கினால் உணர்கிறேன் 
மூவறிவு உயிர்நான் ??
*எறும்பு கரையான்*

நாக்குமூக்கு கண்காதுகளினால் உணர்கிறேன் 
நன்கறிவு உயிரும்நான்??
*நண்டும் தும்பியும்* 

உடல் நாக்குமூக்கு கண்காதுகளினால் உணரமுடிகிறேன் 
ஐந்தறிவு உயிருமாய் நான்??
*விலங்குகளும் பறவைகளும்*

ஓரறி முதல் ஐந்தறிவோடு முலையை உபயோகிப்பதால் 
ஆராமரிவு ஆகிறான் இவன்???
*மானிட மனுஷன்_மனுஷி*


ஞாயிறு

குரல்

அன்னைத் தமிழின்
அற்புதக் குரல்!
அன்பைத் தெளிக்கும்
அழகின் குரல்!

ஆணவம் இல்லா
ஆனந்தக் குரல்!
ஆர்வம் இருக்கும்
ஆசைக் குரல்!

இன்பம் இணைந்த
இனிமைக் குரல்!
இளமை சொல்லும்
இசையின் குரல்!

ஈர்ப்பாய் இருக்கும்
ஈசன் குரல்!
ஈடிணை இல்லா
ஈகைக் குரல்!

உண்மை பேசும்
உதட்டின் குரல்!
உறவாய் ஆக்கும்
உணர்வின் குரல்!

ஊமையும் கூட
ஊகிக்கும் குரல்!
ஊரார் நெஞ்சில்
ஊரும் குரல்!

எண்ணம் மறவா
எளிய குரல்!
என்றும் இனிக்கும்
எளிமை குரல்!

ஏழ்மை இல்லா
ஏழைக் குரல்!
ஏளனம் இல்லா
ஏட்டின் குரல்!

ஐநிலம் போற்றிடும்
ஐஸ்வர்ய குரல்!
ஐங்குறு நூற்றின்
ஐயன் குரல்!

ஒழுக்கம் என்றும்
ஒழுகும் குரல்!
ஒவ்வொரு சொல்லும்
ஒப்பனைக் குரல்!

ஓடைகள் ஓடும்
ஓசைக் குரல்!
ஓலையில் எழுதும்
ஓவியக் குரல்!

ஔவியம் இல்லா
ஔடதக் குரல்!
ஔடனம் ருசிக்கும்
ஔவையின் குரல்!

சந்தக் குரல்! அது
எந்தக் குரல்! மாலதி
சொந்தக் குரல்! தமிழே
தந்தக் குரல்!

-முகம் தெரியா அண்ணாவின் கவிதை எனக்காக..!

திங்கள்


முற்றுபுள்ளியில் சிறக்கும் ஆசைகள் 

தோன்றலின் எண்ணம் திரை-எதற்கு??
வானுக்கும் ஆழிக்கும் எல்லை-எதற்கு??

வாலிபத்தை தொலைத்துபின் தேடுவது-எதற்கு??
காலாவதி ஆனபின் காலத்தை தேடுவது-எதற்கு?

ஆசை அடக்கியப்பின் ஏக்கம்-எதற்கு??
தகுதி இருக்குமாயின் தயக்கம்-எதற்கு??

மீளா கனவுகள் தடை-எதற்கு??
வையகத்தில் வெற்றிடம் பல-அதில் 
தடம் படிக்க அச்சம்-எதற்கு..????

நீ முற்றும் இடத்தில் தொடரும் சிறகுகள்..!!!
ஆசைக்கு வேலி எதற்கு...!!!

- மாலதி ராமதாஸ்

கவிக்குயில் மதி எனும் புனைபெயரில் கவியெழுதி வருமிவர் முண்டாசு கவிதையில் வீழ்ந்து, மீசையில்லாகண்ணம்மாவாய் கவித்திட்டுபவள்.. 


செவ்வாய்

அ முதல் ஃ வரை உயிரோடு மெய்கலந்தவள் சகோசகி

அன்பிலொரு அன்னை
தியாகத்திலொரு தந்தை 
பழமொழிமுதல் பஞ்சாங்கம் வரை 
அறிவுரை சொல்வதில் பாட்டி.
ஆசையாய் கொஞ்சலில் அக்கா
அன்பாய் கண்டிபதிலொரு அண்ணன்
அக்கரை காட்டுகையில் தங்கை.
ஆசைபொருளை  தியாகம் செய்வதில் கொடைவள்ளி.
காய்ச்சலின் கவனிப்பில் மருத்துவர்.
வீட்டுபாடம் சொல்லிகொடுக்கையில் ஆசிரியை.
ரகசியங்களை சொல்லுகையில் சகி(தோழி)
ஆயிரம் சொந்தங்கள்  இருந்தாலும் 
தம்பி தங்கைகளை பாதுகாப்பதில் என்றும் 
இரண்டாம் தாயுமானவள் 
வரம் தந்த தேவதைகள் அல்ல இவர்கள் 
வரமே வரம் வாங்க  தவம் கெடக்கும் 

என்றும்  தேவதைகளாய்  -என் அக்காக்கள்

கவிதையை நேசிக்கும் நேசகி 
எண்ணங்களில் உதித்தவை யாவும் 
கவிதையென எண்ணுபவன் 
என்றும் கவிஞ்சனின் ரசிகை 

திங்கள்

 
கவிதை அழகு தமிழ் 
கவியின் கைத்தடத்தில் பிறந்த 
அழகு கவிதைகள் யாவும்  
தமிழுக்கு உயிர்கொடுக்கும் 

கவிக்குயிலின் மயிலிழையில் 
கவிதை,  அழகு -அழகாய் 
கோர்த்த பூமாலையாய் தொடுத்து 
தமிழ் மொழிக்கும் 
வரிகளால் அலங்காரமிடப்படும் 

மதியின் கிறுக்கலில் 
கவிதை யாவும்  
அழகு பெரும் 
தமிழுக்கு  அமுதூட்டும் 

வெள்ளி

வேதியல்மாற்றங்கள்


என்னுள் தோன்றும் 

வேதியல்மாற்றங்கள் 

எல்லாம் உன்னால் மட்டும் 

யாரிவனோ..!





இனிமையாய் கடக்கையில் !!!

 

நிகழ்காலம் கொடுத்த 

பொக்கிஷ வரமண்றோ  

என்-இனிய தனிமை.


சுயதொழில்!!!

 
சுயதொழிலில் 
இலாபத்தையெண்ணி 
முயற்சித்த 
முடிவுகள்அனைத்தும் இன்று..!!

கடன்களின் 
ஏறுவரிசையாகவும்.$123*'"|\
லாபத்தின் 
முதல்படியைகூட தொடமுடியாத 
இறங்குவரிசையாகவும் போகிறது 

*இன்றைய நிலைமை *

ஹைக்கூ??

லாபத்தின் -எதிர்பார்ப்பு 
நட்டமாய் போனது..!!

*கொரோனாவினால்*


இளைஞர்களின் குமரல்


இன்றைய 
தேவையின் தேடல்..!!!

நாளைய 
பயமாகிபோகிறது
 
இதுதான் வாழ்க்கையா ???
 

#வெற்றியின் முதல்படி#



#அஃஷுவின் முதல்படி#


 


பள்ளிக்கு சென்று பட்டம் 

பெறாதவர்கள் இருப்பினும் 

செல்லாமல் சொல்லிவிட்டாய் 

உன் வெற்றியின் முதல் படியாய் 

*முதல் சான்றிதழ்*


Dகாலம்

அன்பின் ஆழத்தில் பூத்தது அந்தகாலத்து காதல், 
$ இன்றோ வருமான
தொகையை வைத்து பூக்கவிருக்கின்றன 
இக்காலகாதல்..!

புதன்

கடிகாரம்

முள்கள் குத்துமாம் 
உந்தன் முள்கள்-
என்னை சுறுசுறுப்பாகின்றன -கடிகாரம் 


வேலிக்காத்தான் முள்

வழிப்போக்கனான எண்ணை குத்தியும் 
என்னிலிருந்து உன்னை உடையாமல் 
வணங்கிஎடுக்கிறேன் -வேலிக்காத்தான் முள் 

ஆயுத எழுத்து..!!

சத்தமிடாமல் முத்தமிடுகிறது-பேனாமுனை 
ஒவ்வொரு ஆயுத எழுத்திலும்..!!

புத்தகம்

பாடத்திட்டங்கள் வந்தபோது தேடாதநான் 
உன்னைத்தேடி திரிந்தேன் நாளைத் 
தேர்வு என்பதால் -புத்தகம் 

  
பள்ளி முதல் கல்லுரிவரை, 
தேடல் முதல் தேவை வரை அனைத்திலும் 
அடம்பிடிப்போம். 
உன்னிடம் வாங்காத 
அடிகளும் இல்லை, 
என்னை தொல்லைசெய்தே திட்டுகளை வாங்கிசெல்வாய் என்னிடத்தில் நீ....

திங்கள்

*மனிதாபியத்தின் தேடல்!!

தொலைந்துபோன நேயம்/இரக்கம்*
சிப்பிக்குள் முத்தாக, சிற்பியின்-சிந்தனைக்கேற்ற சிலையாக எவ்வுயிரிடத்தும் குறைவில்லா-அன்பை நிறைமனதுடன் காட்டுவதன்றோ ***மனித நேயம்***
மானுடர் இரக்கத்தில் மட்டும்பிறப்பதில்லை-மனித நேயம்! அன்பனைத்தையும்-அள்ளித்தந்தவளை, அனாதைஇல்லத்திற்கு தாரை வார்க்கின்றான்

தொலைந்த ஆசைகள்!!!


இரைதேடுதல் இன்பம் அன்று -இதயம் 
தொடுதலே இன்பம்.. 

கல்லூரியில் பட்டய படிப்பிற்கான 
ஆணை பத்திரமாகவந்தபோது பெறாத இன்பம் 
பதின்பருவ தோழிகள் பாசமிகு சகிகளானது,
வேதியல் ஆய்வகத்தில்  கலப்படமான உப்பையே 
கலப்பினம் செய்தது, வகுப்பைவிட்டு வருவாயா?
வாசலைத்தாண்டி வருவாயா? என 
தோழிகளுடன் விண்ணைத்தாண்டிவருவாயா 
பயணசீட்டு வாங்காமல் -செய்த பயணம் அது, 
தேவதைகளுடன் தேவதையாய் கண்ட 
முதல்திரை- தேவிதிரையரங்கம்"
நிராகரிக்கபட்ட இடத்தில், நிர்வாகியாகி என் வேலையை 
செம்மையாய் செய்தது.விடாமுயற்சியின் தேடலில் 
விடியலையலையெண்ணி காத்திருந்த  அந்தநாட்களே 
என்றும் பதியாத தழும்புகளாய் மனதில் பதிந்தது.


விதவையவளின் கைவண்ணத்தில் வண்ணக்கோலம்..!

வெள்ளை நிற புள்ளி ஒன்று, கம்பிகலில் சிக்கல்கோலமாய்  அடைக்கபட்டிருந்தது,

முதல்புள்ளையார் சுழி போல வண்ண ரங்கோலியாய் _விதவையவள் மாற்றமாய் 
மறுமணம்...

அனாதையின் ஏக்கம்!!

விலாசமில்லா மொட்டை கடிதாசிபோல துனையெழுத்தில்லா மழலை நான்

அனாதை ஆசரமங்கலில் பிறந்த நாள் கொண்டாட்டம்??

ஒரு நாளில் கிடைக்கும்
 இலவச உணவில் 
ஏக்கங்கள்ஆயிரம்

உணவிற்க்குபதில் 
தாய் தந்தையை தானம் செய்யுங்கலென்று

அறிவு..!

உடலால் மட்டும் உணர்கிறேன் 
-ஓரறிவு உயிர் நான்???
*புல்_ பூண்டு-மரம்*

உடலோடும்  நாக்கினால் உணர்கிறேன் 
ஈரறிவு உயிரும் நான் ???
*மீன் பாம்பு*

உடலோடும் நாக்கும் மூக்கினால் உணர்கிறேன் 
மூவறிவு உயிர் நான் ??
*எறும்பு கரையான்*

நாக்குமூக்கு கண்காதுகளினால் உணர்கிறேன் 
நன்கறிவு உயிரும் நான்??
*நண்டும் தும்பியும்* 

உடல் நாக்குமூக்கு கண்காதுகளினால் உணரமுடிகிறேன் 
ஐந்தறிவு உயிருமாய் நான்??
*விலங்குகளும் பறவைகளும்*

ஓரறிவு முதல் ஐந்தறிவோடு மூளையை உபயோகிப்பதால் 
ஆராமறிவு ஆகிறான் இவன்???
*மானிட மனுஷன்_மனுஷி*

ஹைக்கூ

முள்கள் குத்துமாம் 
உந்தன் முள்கள்- என்னை
சுறுசுறுப்பாகின்றன *கடிகாரம்*

வழிப்போக்கனான எண்ணை குத்தியும் 
என்னிலிருந்து உன்னை உடையாமல் 
வணங்கிஎடுக்கிறேன் *வேலிக்காத்தான் முள்*

சத்தமிடாமல் முத்தமிடுகிறது-*பேனாமுனை*
ஒவ்வொரு ஆயுத எழுத்திலும்..!!

பாடத்திட்டங்கள் வந்தபோது தேடாதநான் 
உன்னைத்தேடி திரிந்தேன் நாளைத் 
தேர்வு என்பதால் *புத்தகம்*

இயற்கை..!!


எழிலோவியமாய் கொட்டும் அருவிகள் 
பயிர்களின் தேன்துளிகளாய் மழைச்சாரல்கள்.
உருவமில்லாமல் உணரவைக்கும் காற்று 
ஏழைவீட்டின் அழையாவிருந்தாளியாய் 
எட்டிப்பார்க்கும் கதிரொளி
கிணற்றில் இரவுகுளியல்போடும் நிலா..!
 
மொட்டைபோடும் ஆசைவந்ததும் 
இலையுதிர்காலத்திலே மரங்களுக்கு 
ஓரறிவு பூச்ச்சுகளின்நிழற்குடமாய் 
காளான்களின் தோற்றம்? 
குக்கூ பறவையின் கூவல் 
கிக்கி கிளியின் மழலைப்பேச்சு 
அம்மாஎன்றழைக்கும் ஐந்தறிவு பசுக்கள் 
தவழும் குழந்தையை.
சீரும்பாம்புகள் அழிக்கநினைப்பவர்களை 
அலையவிடும் தேனீக்கள் 
பாட்டியிடம் திருடியும், விரதவுணவுகளை 
அன்போடுஅழைத்து கொடுக்கும் 
படையலும் காக்கைகளுக்கே..

சுட்டும் விழி சூடரே பாரதிவரிகள்

மீசையில்லா பாரதியாய், 
நடனத்தில் உருவம் கொடுத்த நங்கைஇவள்..

வரிகளின் ஆழத்தில் மூழ்கவைத்து எங்களை,

புத்தகத்தில் உறங்கிய பாரதியின் வரிகளை உயிர்பெற செய்தவ உன்குரல்கள். 

முண்டாசின் வரிகளும்
அம்மங்கையின் நடனஅசைவில் விளக்கங்களாய், உன் குரலினில் கோர்த்த பூமாலையாய் பாரதிவரிகளை உயிரோட்டம் முக்தியளித்தாய்...

சனி

காதலின் தேர்ச்சியாய் கல்யாணமேடை..!

தொடமுடியாத தொலைவுகளிலும் இருந்தும்-உன் காதல் 
காற்றாய் தொடர்ந்து வந்தது..!!
 
வருடங்கள் ஓடின,,,
வாழ்க்கையின் ஓட்டத்தில் 
இருந்தும்-வரும் வரண்களையெல்லாம் நிராகரித்து,

 உம்மை யென்னியே 13 வருடத்தினை  தவமாய் மனதில் உம்மை முடிந்திருந்தேன், 

நம் இருவரின் தேர்வுகளின் தேர்ச்சியாய் நாளை 
நம் திருமணம்

வெள்ளி

நாத்திகன் நம்பிக்கை வடிவமாய் கடவுள்

உன் நம்பிக்கைக்கு பெயர்வைத்துபார் அங்கே கடவுளை காணலாம்👍சிலையிலும் அல்ல ஆலயங்களிலும் அல்ல🤝உன் உள்ளே😍உனக்குளளே உருவமில்லாத ஒரு சக்தி ஆடிகொண்டிருக்கும், காணும் விதம்தான் வேறு, என்னில் காண்பதால் நான் நாத்திகன் ஆனேன். ?? உன்னில் கானததால் ஆத்திகவாதியாய் கோவில்களை தேடிசெல்கிறாய்

வியாழன்

ஒரரிவு முதல் ஆரறிவு..!

ஓரறிவு -புல்லாய்பிறந்து,

ஈரறிவு- நத்தையாய் தவழ்ந்து 

மூவறிவு -எறும்பாய் கடுன முழைத்து 

நான்கறிவு நண்டாயும், 
சிக்கனத்தில் சுமையைசுருக்கி 

தும்பியாய் சிறகமைத்து,

ஐந்தறிவு பசுவாயும்,பறவையாயும் 

பிறவி எடுத்து - திருப்தி அடையாமல் 

ஆறாம்அறிவாய் மனிதபிறவியில் முக்தியடைகிறது  வாழ்க்கை

பெற்றோர்..!

விவசாய விஞ்சானி 
சுமைகளிலும் பிள்ளைகளின் 
கனவுகளை தேடுபவர்.
கவலையில் மகளின் 
முதல் தேடல் அப்பா…!

தியாகத்தின் உருவம் நீயே 
உணவாயினும் உண்டியலாயினும் 
கடவுளின் பிராத்தனையாயினும் 
அனைத்திலும் பிள்ளைகளே 
உயிர்நாடி,
இதயம் துடிப்பதை போல 
உன்மனது எம்மைப்பற்றியே 
யோசனையில் துடிக்கும் 
அம்மா…!

புதன்

கவியின்_கல்வன்..!!!

யாருக்காகவோ யாரோ
தீட்டியகவியாய்
என்கவிதைகள் 
பலர்மத்தியில் பேசப்பட்டாலும்..!

உனக்காக படைக்கபட்டவையென
எப்படி கூறுவேன்..?



வியாழன்

மாறா..!

தஞ்சமடைந்த தந்தையின் 
காதலியை தேடியே 
சுவர்முழுதும் விடைதெறியா 
கிருக்கலாய் இவன் கிருக்க 

சிறு வயதில் சிறுமி கேட்ட மீராபாட்டியின் 
புதிர்கொண்ட கதைகள்,

புரியாத கேள்விக்கும் விடைகிடைத்தது,
அவன்கிறுக்கல் ஓவியத்தில் இவளுக்கான விடை 
தேட வைத்தது...

மூவரின் ஆசையை 
முழுமனதாய் நிறைவேற்றியவள்

எதையோ தேடி எதர்த்தமாய் 
இவளுக்கான துணையும்
முதியவர்களின் காதல்  இருமனங்களையும் இனைத்தது..

செவ்வாய்

விளம்பரமயம்!!


சுவரொட்டிகளிலும் 
தொலைக்காட்சிகளிலும் 
அறிவிப்பு-காகிதபேப்பரிலும் 
திசையெங்கும் 
விளம்பரங்களினால் ஏங்கும் 
குழந்தைகளின் ஏமாற்றமாய் 
விலையேற்றம்..


பறையடிகள் கழிந்தன, 
நடிகைகளும் புகுந்தன..!!

விற்பவனின் ஆனந்தம் 
வாங்குபவனின் பெருந்துன்பமாய் 
விலையேற்றம்..




வெள்ளி

ஜல்லிக்கட்டு.!


சீறும் இரு காளைகல் 
ஒரே களமிறங்கி 

தமிழனின்பன்பை 
வீரத்தால் வெளிகொனர்வது..!!

வலைதள பூக்கள்!!

என் வலைதள பக்கத்தில் 
நிறையப்பூக்கள் 
கவிதையாய் பூத்துருக்கு..!!! 
வாசகர்களையெண்ணி 
காத்துமிருக்கு...!!
உங்கள் பதிவிற்காக 
ஏங்கியுமிருக்கு 
வாசியுங்கள்..!!

வியாழன்

தை-பொங்கல் !!!



தித்திக்கும் சுவையோடு
தங்கமகளை எதிர்பார்க்கும்  
தைதிங்கள் பிறந்தநாள்..

பூக்கள் பூத்துகுலுங்கும் மாதமுமே.!
எட்டுத்திக்கும் பரவிகிடக்கும் 
பூசணிபூக்களை வாசல்கோலத்தில்
வண்ணமிட்டு ரசிப்பதும் தனிஅழகே..! 






பிடித்த கவிஞர் தபூஷன்கர்..
காதலை பிடிக்காதவன் கூட 
இவர்ப்புத்தகங்களை வாசிக்க நேர்ந்தால் 
கண்டிப்பாக ஒருதலை காதல்பிறக்கும் 
அழகைமட்டுமே ரசிக்கும் பலகவிஞ்சர்கள் 
மத்தியில்...
காதலியை  சுற்றியுள்ளய னைத்தையும் 
நேசிக்கத்தொடங்கியவன் 
புத்தகங்களின் தலைப்பும் 
எதார்த்தம் நிறைந்தது..!!
ஒருவரியில் மூன்றுவரத்தைக்கொண்டும் 
கவிதீட்டுபவன்...!!! 
அவை ஹைக்கூகளுமில்லை..


வெட்கம்,சிணுங்கள் எழுத்தில் உயிரோட்டமிட்டு 
பள்ளி கல்லூரியின் கிலோமீட்டர்கள் வரை,
செடிகள்-கொடிகள் மலர்களாய் மலரும் கவிதைகள் 
குட்டை,  குலங்கள் குளிப்பதுமாயொரு ரசனைகள் 
தெருக்கள்-கோலமாவு பெருமைகளை  
கோவில் ,தேர், கடவுள்சிலையென 
காதலியை நினைவில் நிறுத்துபவன் 
கண்ணின்-மை முதல் கால் கொலுசும் 
தன் காதலியை ரசிப்பதைபோலொரு உவமை.
இவன் பேனாவிலே கவிதீட்டுவதைப்போல 
அனைத்தும் இலக்கணத்தில் பிறக்காமல் 
எதார்த்தத்தில் பிறந்தவை..


தபு கவிதைக்கே 
காதலியை கவிதையாக்குபவன்.
முட்கள் மலராவது இவள் கூந்தலில் சூடவே 



 


செவ்வாய்

KD எனும் கருப்புதுரை..!


KD எனும் கருப்புதுரை!!!
மதிமங்கும் பருவத்தில் 
நான் கற்றது-மகிழ்ச்சியாய்
பத்திரத்தில் கையொப்பத்திற்க்கு
பதிலாக கையெழுத்திட்டது!!!

நன்பனோடு இருசக்கரவாகன 
உலாவந்தது..!!

சுமையாக நினைத்த குடும்பத்தில்இருந்து 
தப்பி உன்னிடம் தஞ்சமடைந்தது..!!

பொருலிருந்தும் பிள்ளையிருந்தும் 
அனாதயான நான்??
ஏதுமில்லா தருனத்தில் 
எஜமானிக்கினாய் சிறுவனே..!!!

வயதில் வலந்தவனைவிட 
குனத்தில் வலந்து 
என்னை வழிகாட்டிய 
*குட்டிமழலைதாயுமானவனே!!!





ஏற்றம் (ஏணி)

பாரபட்ச்சமில்லாமல் 
அனைவரையும் உயரே ஏர
துனையாய் நிர்க்கும் ஒர்-தூன்...!!

பெற்றோரின் 
ஊக்குவிப்பைக்காட்டிலும் 
தோழமையின் வார்த்தைகளே
வெற்றியின் முன் தள்ளுகின்றன..!!

வாழ்வெனும் சூதுவிளையாட்டும்
பரமபதம்போலவே...!!

ஏற்றத்தின் பாதையை சரியாக 
தேர்ந்தெடுத்தாலே போதும்
நம் லட்சிய இலக்கை அடையலாம்..

எந்த நஞ்சும் நம்மை தீண்டும் முன்..

குப்பைத்தொட்டி!

தூக்கிவீசும் குப்பைப்பொருள்கள் 
தூக்கி கொஞ்சும் பொம்மை
குழந்தையானதென்னவோ.!.!

இயற்கை பிள்ளையின் 
செயற்கை கொஞ்சல்
பிளாஸ்டிக் பொம்மை தொட்டி.!!!

இருப்பவன் குப்பைகளில்
வேண்டாமென எரிவதை,
இல்லாதவன் எடுக்கிறான்.. 

முதலாளிகுழந்தையின் அழுக்கான
பழைய பொம்மைகள்...
அழகாக ஜொலிக்கின்றன 
ஏழைக்குழந்தைகலின் முகத்தில்
மகிழ்ச்சியின் பிரதிபலிப்பாய்...

அழுக்குபடிந்த குப்பைகளும்
அழகு பெறுகிறது 
அன்பின் இல்லத்தில்...

என் அக்காவின் 
திறமைகளினால்
குப்பைகள் மருஜென்மமெடுக்கின்றன 
காட்சி பெட்டியெனும் அரையில்..

சமையலறை

உணவுகளின் பிறப்பிடம்
சமயலறை!!
செல்ல சண்டைகளும் 
பரக்கும் கரண்டிகளும்
பாசமூட்டும் ஸ்பூனாவது
சமையலறையில்..

அஞ்சறைபெட்டியே அம்மாவின் 
அவசர சேமிப்புவங்கியானது..!

மழலைகள் கரங்களினால்
தட்டுகளும் ஸ்பூனும் 
சமையலறையில் அழகிய 
இசைகூடமாயாவது..!

சுமைகளிலும் மகிழ்ச்சி பிறப்பது 
பாராட்டுகையில்..!!

சமையலறை சந்தோஷகலமாவதும் 
சங்கடகலமாவதும் கையாலும்
விதத்திலே..!!!

கூதிர்காலம்(குளிர்)

இறைவனின்சிலை
பனித்துளி நனைக்கையில் 
குளிர்காலமானதோ ???
பில்களில் குளிர்-போடும்  
 குளியல்-பனியின் ஷவற்-பாத்தோ ???
சிலந்திவலையும் மழைத்துளியால்  
மாளிகைக்கட்டும் ஆசைவந்ததும் 
மார்கழிமாதத்திலோ???
கதிரவனினை உதிக்கவிடாமல்  
உறங்கவிட்ட காலமது..!
குக்கூ குயிலிசையும் ஓய்வெடுத்த காலமது ..!
சேவல் கூவாமலும் மறந்தகாலமது 
அதிகாலை பீடையொழிய சங்கின்முழக்கமிட்ட 
குளிரின் மாதமும் மார்கழியிலே...!!!
காலநேரங்களை மறந்து போர்வை 
நொடிகளில் புகுந்தக்காலம்-குளிர்...!
உறக்கத்திலும் உறங்கும் குளிர்காலம்..

துவண்டதருனம்

எந்தன் தூண்டுகோல் ஆசானாய்.!
என்னை போதிக்கும் அன்னையாய்..!!
எந்தன் தந்தை பிம்பத்தின் நிழலுமானவனாய்...!!!
நான் துவண்டகணத்தில் தூ வள்பேனாவாய் நின்றாய்..!!
என்சிறுமுயற்சிக்கு நீ மெச்சிபுகழுகையில் 
என்கனவுகளும் துளிர்க்கிறது!!
உன்பிரிவில் நான்மகிழ்ச்சிக்கண்டேன் 
பாசத்தின்ஆழத்தினை அறிந்ததருணமது,!!

வாடியபோதும் தேடியபோதும் 
அன்புக்கவசம்கொண்டு 
அள்ளிஅனைத்துவிட்டிட்டாய்  
அலைபேசியிலே .!!

வியாழன்

பதியாத தழும்புகள்

பாரதியின் கவிகடலில் 
வீழ்ந்த என்காதல்போல...!

திருவள்ளுவரின் குறலின் 
பொருலறியா மழலையைப்போல..!

கல்விகண்திறந்து ,மூடநம்பிக்கையில் 
முற்றுபுள்ளியிட்டு, வாழ்வின் சிக்கனத்தையம் 
கற்றுகொடுத்த கர்மவீரர்போல..!

கரண்டிகல்  இருந்தகரங்களில் 
கல்விபுத்தகம் பரிசளித்தவர்..!!
சுயதொழில்/ தம்வயிற்றுகாயினும் 
உழைத்து தனித்து நிற்கவேண்டுமென பாடம்புகட்டியவர்..!!
சாதிசாக்கடை குப்பைகளை 
எழுத்தத்தின் மூலமே  அகற்றியவர்..!!
பகுத்தறிவுகலை கற்றுக்கொடுத்த எந்தன் ஆசான் பெரியர்..!

மொழியின் தீராத காதல் -தமிழோடு!!!
என்வாழ்வின் கற்ற பாடம் -
பதியாத தழும்புகலாய்...!!!
இவர்களின் வரிகளிலேயே!

புதன்

சிலந்திவலையும் முன்மாதிரியே

புள்ளியாய் ஒருலட்சியம்  

நூலிழையாய் என் கடினஉழைப்பு 

தொடா முயற்சியாய் என்பயணப்பணி 

விரைவில் சிலந்தி வளையைப்போல 

இலட்சிய இலக்கை அடைவேன்,

விழுந்தாலும் விடாமுயற்சியுடன்,

புழுக்கள் படடம்பூச்சிகளாய் 

உருவெடுத்தபோது -வானில் 

வண்ணத்துப்பூச்சியாய் 

சிறக்க துடிக்கிறேன்,



தன்னமிக்கை விருட்ச்சம்...!

 

எறியப்பட கற்கள் 
ஏணிப்படுக்கட்டுகளாக...!!!
வீசப்பட்டவிதைகள் விருட்ச்சமாய்
எழுவதைப்போல..!!!
குறைசொல்லலில் உளிகொண்டு
கல்கியாய்...!!!
நம்மை நாமே உளிக்கொண்டு 
தயார்படுத்திக்கொள்ளவேண்டும்...! 
ஓயாமல் உழைக்கும் *கடிகார முல்லைபோல* 
ஒவ்வொருநாளும் கிழிந்துபோகும் *நாளிதழைப்போல*
சின்னச்சிறு தன்னம்பிக்கையின் விதைக்கொண்டு,
தைரியமுயற்சியோடு பாதையை சரிசெய்யாதலே 
விருச்சமெனும் வெற்றியை பெற்றிடலாம்.

***கவிக்குயில் மதி***



துணைவி

துவண்டுபோன தருவாயில்
தோழனுக்கு வார்த்தையில் 
சக்தியிட்டு விருந்தளிப்பவளே,

தேடாமல் துளைத்த 
பாதைகளை 
பாசத்தால் பார்வையிட வைத்தவளே,

வேலையில்லா பட்டதாரியின் 
தேடலும் (வேலை)தொடங்கியது
துணையானவள் உன்னாலே!!!

#தோழியின்_துனை(/வி)

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....