வெள்ளி


விக்களின் விரதம்,,,



















இறைவா விக்கலின் 
பிடியில் இருந்தும் 
விக்கல் நீக்காமல் 
இருக்கவே வேண்டுகிறேன்
என்னை நினைக்கும் 
இதயங்களை பல 
நேரம்  இத்தருணத்தை 
மறக்காமல் 
என்னை நினைக்கவே,,,, 

வியாழன்


சிரிப்பு,,,,,






      மருத்துவம் வேண்டாம்
      மாமருந்தாய்  மகிழ்ச்சி
      என்னிடம் இருக்கையில்,,,,

      என் கவலையின்
      கடவுள் பிரசாதம்
      எதிர்பாரா  நகைச்சுவை ,,,,

       தோற்கடிக்கும்  துக்கங்களை
       புதுப்பிக்கும் இன்பங்களை,,,

       சத்தங்களும் வரும்
       முகமும் அழகு பிறக்கும்
       பொன்சிரிப்பில்,,,,,
       
     

       
     



டாஸ்மார்க் !!!!!













கிராமங்கள் தொடங்கி 
நகரங்கள் வரை 
உனக்காக ஒரு கூட்டம்...

பகடை ஆட்டமும் 
தோற்றுப்போகும் 
பாரதத்தில் இன்று,,

வீட்டின் அணைத்து 
பொருட்கள் தொடங்கி 
நகை பணம் 
இல்லறத்தின் இன்பங்களை 
அனைத்தும் அடகு வைக்கும்
ஒரே இடம் 
டாஸ்மார்க்கே  முதலிடம் ,,,
காலத்தின் கொடுமை பட்டினி 

விதைப்பதால் நான்
பட்டினி  ஏழை,,,,,
 
விதைக்காததால் நீயோ
பசியில்லை பணக்காரன்,,,,

இறைத்த அன்னத்தினை
குப்பையில் வீசுகிறாய்
ஆனாலும்
உனக்கு பசியில்லை
பசியாற உணவிருக்கு 
உன் இல்லத்தில் ,,,

பசிக்கும் எனக்கு
கால் வயிறு காஞ்சுகூட
வயக்கவில்லை....



  மழையின் அருமை 





கவலைகளில் மறந்து 
போன கண்ணீர் துளிகள்,,,

ஆரம்ப மாறியில் 
அழுகையில் தொடங்கி 
ஆனந்தமாய் ஆட்டம்,,,,








முற்று புள்ளி...



முற்று பெற விருக்கும் மாந்தரின் 
முகவரியாகவும் 
முகவரியாக வெளிவரவிருக்கும் 
பிஞ்சுக் குழந்தையைக்கு 
முற்றுப்புள்ளியாய் 
கருவிலே முற்றுபுள்ளி......





மரணம் 


வேண்டியவரை காக்க வைக்கும் 
வேண்டாதவரை கூட்டி செல்லும் 
     
கிணற்றின் ஆழ்துளையில் 
தெரியும் நிலவின் 
ஒளியைப்போல 
எத்தனை முறை  முயன்றாலும்
கிட்டாதவை மரணசுகம்....


வேதனையில் இவ்விதியை 
எடுக்க முயற்சிக்கும் 
வலியை அனுபவித்தபின்  
வாழ நினைக்குமுன் 
உயிப்பிரியும் எதிர்பாரா 
திருப்பங்களால் எமர்த்தனின் 
ஆசைக்கு இணங்க ,,,,,,,,,,


புதன்


கனவு

கோடையில் குளிர்
குளிரில் வெப்பம்
வெப்பத்தில் மழை
மழையில் சூடு
குளிரின் பனி
பணியில் மழை
மழையில் குடை
குடைக்குள் தொலைந்து
போன சில நொடிகள்
நொடிகள் அனைத்தும்
நினைவால், நினைவுகளே
கண்ட கனவா
மழை வழியே
ரசிக்க போகும்
தூறலின் மிஞ்சிய
இலை  சொட்டு
நீர் ஆஹா
அழகிய இயற்க்கை
சந்ததி






எதிர்பார்ப்பு 














எதிர்ப்பார்க்காமல் இருக்க 
சொன்னதால் என்னவோ 
என் எதிர்பார்ப்பும்
எதிர்பார்க்கிறது 
உங்கள்  வரவை 
யாரோ ???

ஞாயிறு


அன்புள்ளம் கொண்ட அப்பாவிற்கு,, 

சிறுபிள்ளை முதல் 
மகளை தாய் என கருத்துபவரே 
மகளிடம்  நெருங்கி பழகி 
ஆரிரோ தாலாட்டு தொடங்கி 
அன்பை முத்தம், உறக்கநேரங்களில் 
சிறு  கதைகளையும் கூறி 
கொஞ்சல் செய்பவரே சிறுவயதில்,,,

கால மாற்றங்களால் 
உம்மை விட்டு தள்ளி நடக்கவும் 
கற்று தருகிறாய் 
என்னை பற்றி விசாரணை 
தாயிடம் கேட்கிறாய் 
கொஞ்சலும் தாலாட்டும் 
தரமறந்து பிள்ளையின் நலனை,, 

கருவிலே சுமக்கும் தாயுக்கும் நிகராக 
இரு உயிரை வாழ்நாள் முழுவதும் 
உம்மில் சுமப்பவரே 
வாழ்நாள் முழுவதும் உறக்கமில்லாமால் 
ஓடி ஓடி தேய்ந்தும் தேயாமல்
மனைவிக்கும் பிள்ளைக்கும் அமிர்த 
உணவளித்து கால் வயிறு கூட
நிறையாமல்  உழைப்பவரே,,,

பிடிக்காததையும் பிடித்தவாறு கொடுப்பவரே 
60 வயதானாலும் ஓய்வின்றி உழைத்து 
எவை கேட்டாலும் அளிப்பவரே அன்பாய் 
மாயை உலகையை வேண்டுமென்றாலும் 
வாங்கித்தரவிருக்கும் பாச  தந்தையே 
எப்படி சொல்வேன் எண் நன்றியை,,,

ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் 
சலிப்பின்றி பதிலளிப்பாயே !!!

திறமைகளை பலர் பாராட்டுகையிலே 
அறிகிறேன் இவையனைத்தும் அன்று 
நீர் சீராட்டி ஊட்டியவை என்று,,,

உன்னை போல நல்ல தோழன் 
இப்வுபூலகில் எங்கும் இல்லை 
நான் உன்னை தந்தையை பெற்றதால்,,,

மகள் கேட்டதை அனைத்தையும் 
பெறுகையில் அவள்  மகிழ்ச்சிப்போல 
தருகையிலே உன் சந்தோசம் !!!

சத்தியமாய் சாத்தியம் இல்லை 
அப்பா உன்னை புரிந்து கொள்ள !!!

இனிய தந்தையர் தின
நல்வாழ்த்துக்கள் அப்பா!!! 









யார் அவன் ?
















பொய் எவை?
மெய் எவை ?

நிழல் எங்கே ?
நிஜம் எங்கே?

வினா எங்கே /?
விடை எங்கே

பொய்யில் பூத்த நிழல்?
மெய்யில் பூத்த நிஜம் ?

நிழல்களும் நிஜங்களாக
நிஜங்களும் சிலதருணம்
நிழல்களாக

வினாக்களுக்கு சகிக்காமல்
விடையளிப்பான்
விடைகளுக்கு சில நேரம்
மௌனம் காப்பான்

வேறுபாடுகளை பக்குவமாய்
புரியவைப்பான்..
அன்பு தந்தை ...





சனி

பாரதியார் 



தமிழினை ரசிக்க வைத்தவன் 
குழந்தைகளை அவர் போக்கிலே
சென்று ஒழுக்கத்தினை கற்பித்தவண்
மகளிரை தெய்வாமாய் பார்த்தவன் 
ஆயிரம் அன்புபெயர் வைத்து
அழைத்தாலும் மகளிரை கவிநயமுடன்
தமிழ்நயம் கொண்டு கண்ணம்மா 
என்று அழைக்கையிலே மகளிர் 
அனைவரும் புதுமை பெண்ணாய் 
மறுபிறவி கொண்டனர் புதுநாமத்தினால்  
பெண்களின் மனதை காதல் கொண்டவன் 
கவியால் பாரதி ,,,

சாதி மதம் பார்க்கும் தன்  மனைவியிடம் 
இருந்தும் மற்ற மதத்தினவர்களுக்காக 
பாடல் வரிகளை தன்  கைகளால் எழுதியவன் 

வள்ளுவனும் சொன்னான்
இரு வரிகளில் திருக்குறளை 
பாரதியும் சொல்கிறான் 
பல வரிகளில் வழக்கை பாடத்தை 
சொல்லுதற்குரிய சொல்லியவண்ண
கவிநயத்துடன் அனைவரின் 
ஆர்வத்திற்கு எட்டாற்போல,,

உள்ளங்களிலே அழுகை கண்டவன் 
ஓய்வின்றி உழைத்து ஓய்ந்து போனான் 

பாசத்தினை அளித்தான் 
விலங்குகளிடமும் 
தினசரியும் தான் உண்ணவிருந்த 
வாழையை யானைக்கு அளித்து 
விரதங்களை மேற்கொண்டான் 
மதம் கொண்ட யானை 
நன்றி விசுவாசம் இன்றி 
பாரதியை மிதித்து உயிரை பறித்தது 

சிறுவயதில் இருந்தும் 
பல உள்ளங்களில் இன்றும் உயிருடன் 
வாழ்ந்து வருகிறாய் 
உன்கவிகளை வாசிக்கையில் 
மறுபிறவி கொண்டாய் 
அணைத்து மகளிரும் 
முதல் காதலனாக 
உன்னை நினைக்கையில் ... 

மொழிகளையும் ரசிக்கிறான் 
தமிழை  காவியம் ஆக்கியதால் 

உன் இருவிழி கண்கள் 
முறுக்கு மீசை 
அழகான உதடுகள் 
ரசனை நிறைந்த 
மூளை 
அவற்றை அழகை வெளிப்படுத்தும் 
உந்தன் கைகள் 
பேனாமுனை பிடி அழகு  
அடடா இவை அல்லவ்வா 
என்னவன் பாரதி,,,,,









மன்னிப்பு 








தவறு செய்யவில்லை 
என்று அறிந்தும் 
மன்னிப்பு கேட்க சொல்கின்றன 
செய்யாத தவறுக்காக ,,,

தவறு செய்தவர்கள் 
மன்னிப்பு கேட்டும் 
மன்னிக்க மறுக்கின்றன 

விதிகளின் சோதனைகளை 
மனித மதி வெல்லுமோ 

(கொன்றான் உயிரை அன்று 
தாருங்கள் சிறை தண்டனை 
கொசுவை கொன்றதற்கு 
தவறில் என்ன சின்னவை பெரியவை 
உயிரை கொன்றால் குற்றவாளியன்றோ 




காகிதம் 










என்னை போலவே 
வெள்ளை காகிதம் 
எவர் வேண்டுமானாலும் 
எழுதி செல்கின்றன 
அவர்களது தேவையை 
என் ஆசை 
என் தேவை 
என்ன என்பதை 
கேட்க மறந்து !!!


நாளிதழ் 





என் லட்சியத்திற்காக 
ஒரு நாளை ஒதுக்கினேன் 
ஒதுக்கிய நாளையும்
குப்பையில் கிழித்து வீசுகையில் 
அறிந்தேன் ,,,,
லட்சியத்தை நான் மறந்தாலும் 
நாளிதழ் தன் கடமையை 
எப்பொழும் மறப்பது இல்லையென ,,,,,




மின்சாரம் 













தெ ருவிளக்கின் 
ஒற்றை அழகன் :)

மாணவ மாணவியரின் 
இருட்டறை துயரங்களை 
போக்கி வாழ்வில் 
வழிகாட்ட வந்த தோழன் :)

உன் ஒளியால் 
மற்றவர் வாழ்வின் ஒளிக்காட்டியாய் 
திகழ்கிறாய் !!!

கடவுள் படைப்பின் 
கண்களுக்கு 
பொருத்தமான
இன்ப காட்சி மின்சாரம் 

படிப்பு முதல் 
வேலை வரை
பிறப்பு முதல் 
இறப்பு வரை 
வழிநடத்த ஒளியாய் 
நீயே  தேவை !!!



கற்காலங்களில்

 கணவனின்
மறைவிற்கு பின்
 ஏறும்உடன்கட்டைகளை  பிரதிபளிக்கும்
மானிட உயிரின் உயிர் கொல்லி மறுபிறவி சிகரெட் 

சினத்தினை குறைக்க
கவலையை மறைக்க
தனிமையை போக்க
தனக்கு தானே ஒரு
பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன்
சிகரெட்
எமதர்ம ராஜாவின் அன்பு 
பிறந்தநாள் பரிசு
இறக்க போகும் 
நாளுக்காக முன்கூட்டியேசிகரெட் !!!

தனக்கு  தானே  சூனியம் சிகரெட் 


x

நிலா!!!

அழகிற்க்கு ஈடு இல்லா பேரழகி,
இயற்க்கை வண்ணகோலம்,
வானினை பார்க்க வைத்த  வள்ளியவள்,
குளிர்ச்சி நிலை வசந்தம்,
கோடைகாலத்தில்,
கிராமப்புற மக்களின்
நிஜப்பயண சுற்றுலா ,,,,

ஏழையின் இல்லம் தேடி வந்த
இன்பசுற்றுலா தேவகன்னி ,,,,








முயற்ச்சி

எடுத்துவிட் டேன்
கனவை 
நினைவாக்க 
காட்சியை
படமாக்க
நினைத்ததை
நடத்த 
பாதைகளை 
அமைத்துவிட்டேன் !!!!!
மலரை மலர்ந்தேன்
நீ மாலையிட
என் கழுத்தில் !!!!

சுற்று புறங்களை
ரசிக்கிறேன்
உன்னை சிலகணம்
நினைக்காமல் இருக்க !!!

பேசிகொன்டே இருந்தேன்
பிடித்து போனது
பேசாமலே இருக்கிறேன்
உன்னை மிகவும் பிடித்து போனது !!!

நீ என்னை புகழுகையிலே
சாதிக்க தோன்றுகிறது !!!

அனைத்தையும் நீயே கற்று தருகிறாய் !!!

அவன்தான் ராஜா
என்நை கொள்ளை
கொள்ளும் இளவரசன்
அலுவலகத்தின் முதல்வன்
எந்தன் தோழன்
சந்தோஷ தேடல்
ரசிகன் நாடக ஆடவர் அவன் !!!!!




வெள்ளி

தோழமை போதுமே
சொந்தம் வேண்டாம்
பந்தம் வேண்டாம்
சந்தோசம் வேண்டாம்
பேசாமலே இருப்பானே
கவலையில் மனதிலே
ஒப்பிப்பான் தினசரி
நடந்தது என்னவென்று
தோல்விகள் வந்தாலும்
நீ என் புறம் இருந்து
தேற்றுகையிலே கடவுளிடம் வேண்டுகிறேன்
தோல்விகலை மறுபடியும் தருவாய் என '




                                  '' '' '' மழை'' '' ''


ஒரு முறை வந்தே 

மறைந்து போகிறாய்!!!

பலமுறை ஒற்றை 

சொட்டு  சொட்தாய் 

என்னை உன் புறம் 

இழுக்கிராய் உன்னை 

ரசித்து என் கையில் 

ஏந்தி விளையாடுகிறேன் !!!

மறுமுறை நீ வரும்வரை

என் ஆசை நிறைவேற !!!

மாறியும் காதலும்

கடந்து போகுமா ?

விழுகின்ற துளியும்
அடிக்கின்ற காற்றும்
கலந்து குறும்பு செய்யும்
வெயிலுடன் கலந்த மழை
இடியுடன் கூடிய கனத்த மழை
ஆடலுடன் பாடலும் வரும் மாலையில்
அந்தி மாலை  நேரங்களில் மாறியுடன் கலந்தே
அந்தி மல்லியும் பிறக்கும்
மயிலும் விரிக்கும் தான் தன் தொகையை
ஆனந்த தருவாயில்
ஏழு நிற வானவில்லை போல
ஆடவர் மகளிர் அனைவரும் ஏழு வகை சந்தோஷங்களை
சூடி செல்வர் !!!


அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....