ஞாயிறு

குரல்

அன்னைத் தமிழின்
அற்புதக் குரல்!
அன்பைத் தெளிக்கும்
அழகின் குரல்!

ஆணவம் இல்லா
ஆனந்தக் குரல்!
ஆர்வம் இருக்கும்
ஆசைக் குரல்!

இன்பம் இணைந்த
இனிமைக் குரல்!
இளமை சொல்லும்
இசையின் குரல்!

ஈர்ப்பாய் இருக்கும்
ஈசன் குரல்!
ஈடிணை இல்லா
ஈகைக் குரல்!

உண்மை பேசும்
உதட்டின் குரல்!
உறவாய் ஆக்கும்
உணர்வின் குரல்!

ஊமையும் கூட
ஊகிக்கும் குரல்!
ஊரார் நெஞ்சில்
ஊரும் குரல்!

எண்ணம் மறவா
எளிய குரல்!
என்றும் இனிக்கும்
எளிமை குரல்!

ஏழ்மை இல்லா
ஏழைக் குரல்!
ஏளனம் இல்லா
ஏட்டின் குரல்!

ஐநிலம் போற்றிடும்
ஐஸ்வர்ய குரல்!
ஐங்குறு நூற்றின்
ஐயன் குரல்!

ஒழுக்கம் என்றும்
ஒழுகும் குரல்!
ஒவ்வொரு சொல்லும்
ஒப்பனைக் குரல்!

ஓடைகள் ஓடும்
ஓசைக் குரல்!
ஓலையில் எழுதும்
ஓவியக் குரல்!

ஔவியம் இல்லா
ஔடதக் குரல்!
ஔடனம் ருசிக்கும்
ஔவையின் குரல்!

சந்தக் குரல்! அது
எந்தக் குரல்! மாலதி
சொந்தக் குரல்! தமிழே
தந்தக் குரல்!

-முகம் தெரியா அண்ணாவின் கவிதை எனக்காக..!

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....