திங்கள்



என்னை கவனமாக்கி
செல்லவே
சில கையேடுகள்
என்னோடு !!!

பாதை முழுதும்
கனவுகள்,,,

கற்பனை
முகங்களும்
கலந்த
கலவு  ஏட்டு
காகிதம்

வசிப்பனவும்
அறியேன்
வாசிப்பை
உருவாக்குவாளும்
அறியே !!!

கொஞ்சல் நெஞ்சமும்
கோடான பாசமும்




நிலா நீ வா 

கனவோடு
ஒரு கற்பனை-நிலா


நிஜத்தில் சுட்டெரிக்கும்
ஒரு சூரியன் ,,,






கடிதம் கா ,,,













வானிதழில்
மேகமத்தளங்களுடனும்
மழையின் அர்ச்சனைகளோடு
தொடங்கட்டும்
என் காதல்,,,,


என் ஆசைகள்
அனைத்தையுமே
சீர்வரிசைகளாகவும்
கொண்டு செல்ல
ஒரு
தலைவன் வரட்டும்


என் ஏக்கங்களை
அனைத்தையும்
சேர்த்து
அனுப்பிகிறேன்
மேக ஓவியமாய்,,,

உன்னோடு
வருவதற்குள்
காற்று வீசி
கலையுமுன்
நீ வாசிப்ப்பாய்
எனும் பிராத்தனையோடு
அனுப்புகிறேன்....







கற்பனை கதாபாத்திர கவி !!









பேசாத என் மொழியும்
பேச தெரியாத உன்
வரிகளும்
புரியாமலே
புதிரானது
விடையாகவும்
நானில்லை!!!
வினாவிலே முடிந்துபோன
பந்தமாய்
நாமும்
இப்படிக்கு
பொய்யிலொரு மெய்க்கவி 



புதன்


பொக்கிஷ பாதை 


பாதைகள்
பொக்கிஷம்
ஆனது
நீ
நடந்துசென்ற
பாக்கியத்தினால்,,,,,





ஏங்குகிறேன் நான்



உன் இதழால்
உச்சரிக்க
மறந்த
என் நாமம்
உயிரோட்டமின்றி
தவிக்கின்றது

உயிராக வருவாயா :) 
நீயெங்கே,,,,,





 ஜெயம் உனக்கே 









கோடிபேர் இழுத்தும் 
அசைய மறுத்தபோன 
தேரும்  அறியும் 
தனி 
ஒருவனின் 
பலத்தை போல...




பிழையில்லை அமுதே !!


திருத்த முடியாத
கவிதையும்
நீ

பிழைக்கு
வாய்ப்பு
கொடுக்காத

நற்கவியம்  நீயே,,,,,,,,,,
அதிசய பட்டியலில் பிம்பமும் 



பிம்பமும்
உலக  அதிசயத்தில்
முதலிடம்
நீ பார்க்கையிலே!!!!


பிரம்மன்
படைப்பையும்
மீறி,
பிரதிபலிக்கும்
அழகை
காணுகையில்
அடடா!!!!!

 அழகோ அழகு,,,,,

ஆள்காட்டிவிரலானவன் 













உன்னை சுட்டிகாட்டுகையில்
என் ஆள்காட்டி விரலும்
அழகு பெறுகிறது

யாரிவனோ!!!

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....