செவ்வாய்

குப்பைத்தொட்டி!

தூக்கிவீசும் குப்பைப்பொருள்கள் 
தூக்கி கொஞ்சும் பொம்மை
குழந்தையானதென்னவோ.!.!

இயற்கை பிள்ளையின் 
செயற்கை கொஞ்சல்
பிளாஸ்டிக் பொம்மை தொட்டி.!!!

இருப்பவன் குப்பைகளில்
வேண்டாமென எரிவதை,
இல்லாதவன் எடுக்கிறான்.. 

முதலாளிகுழந்தையின் அழுக்கான
பழைய பொம்மைகள்...
அழகாக ஜொலிக்கின்றன 
ஏழைக்குழந்தைகலின் முகத்தில்
மகிழ்ச்சியின் பிரதிபலிப்பாய்...

அழுக்குபடிந்த குப்பைகளும்
அழகு பெறுகிறது 
அன்பின் இல்லத்தில்...

என் அக்காவின் 
திறமைகளினால்
குப்பைகள் மருஜென்மமெடுக்கின்றன 
காட்சி பெட்டியெனும் அரையில்..

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....