கடனே வறுமை விவசாயி!!!!
ஆழ்துளைஇட்டு வெட்டிய கிணறும்
வற்றிபோனது ஒரு கணம்
தண்ணீர் பஞ்சமிருந்தும் பூமாதேவிக்கு
பூஜை இட்டு நற்றேன் நானும் நாத்து
வாய்த்த நாற்றும் நார்மனியாக வளர்ந்தது
அறுக்கும் கணம் வீணாகி போகியது
வெள்ளத்தில் நெல்மணிகள்
எதனை நெல்மணிகளுக்கு
குடையிடுவேன்நான்.
வாங்கிய கடனுக்கு
விலை நிலம்
பயிராகும் பின் காசாகும் என
பயிருக்கு உண்ண உணவு கொடுத்து
என் உணவை விரதமாக்கினேன்...
விவசாயம் நம்பிய நான்
பட்ட துயரம் என்னோடு போக
மற்றொரு கடன் வாங்கி
என் பிள்ளையை
படிக்க வைத்தேன்
செலவு செய்ய சிறு காசு இல்லாமல்
போகி மனைவியின் தாலியும்
அம்மாவின் காதின் கடுக்கா கம்மாளையும்
அடமானம் வைத்தேன் ...
என் பிள்ளை கடிதம் கண்டு
ஆனந்த கண்ணீருடன்
பதில் கடிதம் அனுப்பினேன்
காலனி பிஞ்சுபோன
தருவாயில் பிள்ளைக்கு
ஷூ வாங்கி தந்து
அவன் காலில் அணிய கண்டேன்
முதலாளி
கனவே கண்ட நான்
இன்று எதோ ஒரு
கணத்தில் மறுபடியும்
வட்டிகளில் கடன்
வாங்கி பிள்ளை
திருமணங்களை
நடத்தினேன்
நல்லபடி
என் வயதும்
வருவதை கடந்தே !!!
விடியலை தேடிய நான்
என்னையே தொடர்ந்த
இருட்டறை :)
வாழ்வின் போராட்ட காலமாய்
என் விவசாயம் ..



