நான் தானமாய் கொடுப்பதை
நீ பகிருகையில்
புலமை வாய்ந்தவனாகிறாய் நீ
(அறிவு )
என்னை பரிமாற்றி கொள்கையிலே
என் தோன்றலின் வெற்றி
(புன்னகை)
பொய்யுரசிக்காத
அரிச்சந்திரர்
கைகளும்
நடுங்கிக்கொண்டுதான்
போகின்றன
குளிர்கால பருவங்களில்.
ஆசை கனவு செல்வங்கள்!!!
ஒவ்வொருவரின்
இன்றைய தேடல்களும்
அன்று தொலைக்கப்படடவை.
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....