புதன்

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் 

மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக 
விடியலில் விடைதேடும் 
இருமணம்....

வியாழன்

மதி

தேய்பிறை இல்லா முழுமதி நீ.. 
ஜன்னலோர இருக்கையில் நான்.. 

நடந்து வரும் பூங்கொத்து நீ.. 
ஏந்துகின்ற கைகளாய் நான்.. 

பொங்கி வரும் அலைகளாக நீ.. 
கால் நனைக்க காத்திருக்கும் நான்.. 

உனை வர்ணிக்க வார்த்தைகள் தடுத்ததில்லை-என் 
குற்ற உணர்வே  தடுக்கும்.. 

இருந்தால் என்ன?? 
என்றைக்குமான  பேரழகி நீ.. 
எழுதி தீர்க்கும் கவிஞன் நான்..

திங்கள்

இயற்க்கை மனமுடிப்பு


வரிகளின் ஆழத்தில் 
மூழ்கி மீளாயோசனையில் 
புத்தக நோட்டை
நான்நேசித்திருக்க ஒருபுறம் 


அடர்ந்த 
காற்று தூவி..!!

செம்பூக்கள் 
சிதறி..!!

என்னையும் 
என்புத்தக -ஏட்டையும்

இயற்க்கை 
மணம் முடித்தது...!!

வெள்ளி

மறந்து போன 
கனவெல்லாம் 
மறுபிறவி எடுத்து
என் வேண்டுதல்களையும் 
ஆசைகளையும் 
நிறைவேற்றுகின்றன..!!
தருணங்கள் 
தடைப்போடலாம்

தருணங்கள் 
தகராறும் செய்யலாம் 

எண்ணியவை எரிக்கபடலாம் 
என்னாத கனவையும் 
எட்டிபிடிக்கலாம் 

எந்தன் கனவுக்கும் கனவின் கனவிற்க்கும் வெற்றிகிட்டியாச்சு..!! 

சுயம்வரம்

ஏதோ ஒரு கனவாய்
எவர் என தெரியாமலே
சிறுபுன்னகை வந்துசென்றே 
போகிறது

எப்படி பட்ட ராட்சசனோ
குரலை உசத்துபவனோ
நாவை அடக்க கற்றுகொடுப்பவனோ
கடும் சோம்பேரியோ
சினம்கொண்டு சிடுசிடுவென பேசுபவனோ

மிகைப்படுத்த கூடியவனோ
மிகைப்படுத்த கூடாதவனோ
எவனோ ஒருவனின் 
கைகளில் பெண்களின் 
வாழ்வு ... 

புதன்

கடவுச்சொல் காதலி



எந்தன் கடவுச்சொல் 

பிழை இல்லா ஒரு வரி பிழயாய் 
என் மடலாகி போக...!!!

உம் சினத்தையும் 
வேதியியல் 
மாற்றம்செய்து
அன்பதிகாரமாக்க
தோன்றுகிறது..!!!

உன் சொந்தங்களின் 
பட்டியிலில் அணைத்து 
உறவாகவும்
நானே ஆகவேண்டும் ..!!!




அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....