இரைதேடுதல் இன்பம் அன்று -இதயம்
தொடுதலே இன்பம்..
கல்லூரியில் பட்டய படிப்பிற்கான
ஆணை பத்திரமாகவந்தபோது பெறாத இன்பம்
பதின்பருவ தோழிகள் பாசமிகு சகிகளானது,
வேதியல் ஆய்வகத்தில் கலப்படமான உப்பையே
கலப்பினம் செய்தது, வகுப்பைவிட்டு வருவாயா?
வாசலைத்தாண்டி வருவாயா? என
தோழிகளுடன் விண்ணைத்தாண்டிவருவாயா
பயணசீட்டு வாங்காமல் -செய்த பயணம் அது,
தேவதைகளுடன் தேவதையாய் கண்ட
முதல்திரை- தேவிதிரையரங்கம்"
நிராகரிக்கபட்ட இடத்தில், நிர்வாகியாகி என் வேலையை
செம்மையாய் செய்தது.விடாமுயற்சியின் தேடலில்
விடியலையலையெண்ணி காத்திருந்த அந்தநாட்களே
என்றும் பதியாத தழும்புகளாய் மனதில் பதிந்தது.