திங்கள்

தொலைந்த ஆசைகள்!!!


இரைதேடுதல் இன்பம் அன்று -இதயம் 
தொடுதலே இன்பம்.. 

கல்லூரியில் பட்டய படிப்பிற்கான 
ஆணை பத்திரமாகவந்தபோது பெறாத இன்பம் 
பதின்பருவ தோழிகள் பாசமிகு சகிகளானது,
வேதியல் ஆய்வகத்தில்  கலப்படமான உப்பையே 
கலப்பினம் செய்தது, வகுப்பைவிட்டு வருவாயா?
வாசலைத்தாண்டி வருவாயா? என 
தோழிகளுடன் விண்ணைத்தாண்டிவருவாயா 
பயணசீட்டு வாங்காமல் -செய்த பயணம் அது, 
தேவதைகளுடன் தேவதையாய் கண்ட 
முதல்திரை- தேவிதிரையரங்கம்"
நிராகரிக்கபட்ட இடத்தில், நிர்வாகியாகி என் வேலையை 
செம்மையாய் செய்தது.விடாமுயற்சியின் தேடலில் 
விடியலையலையெண்ணி காத்திருந்த  அந்தநாட்களே 
என்றும் பதியாத தழும்புகளாய் மனதில் பதிந்தது.


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....