திங்கள்

 

மோனுவும் மதியும் !!!

90ஸ் மழலையாக  ஆஹ நான் 

2K19 மழலையாய் ஆஹ நீ 


தேதி மற்றும் கிழைமைகளும்  

ஒன்றாகவே நாம்பிறந்தோம் 

(25 ஆம் தேதி, வெள்ளி கிழைமை)


முதல் எழுத்தும் ஒன்றி 

மோனையாய் போனது 

மோனா உன்னிடத்தில் 

இப்படிக்கு ((M)) (mona) (mathi))


இரண்டாம் எழுத்துக்கள் 

எதுகையையே எதிர்த்து

இடம் தெரியாமல் போனது,,, 

(na la )(மோ*னா* மா*லா* ) 


ஒட்டி பிறந்தால்  உடன்பிறப்பு 

இரட்டையர்கள் என்பர்கள் ,


ஒட்டாமல் பிறந்தும் 

ஒன்றிணைந்தோம்!!!

 

சித்தியின் பிள்ளையாய் என்றும் நீ 

மோனச்சிட்டு குருவியின் அன்னையாய் 

என்றும் நான்!!!!! 


(அச்சு)~ (குட்டி)~(த ங்க)~ பாப்பா 





















வள்ளுவனின்  குறலியிவள் 
திருக்குறளி பாப்பா >>>>

அவ்வையின் ஆத்திசூட்டியில் 
முதுமையடையா  
மழலை கிழவி இவள்...

குறும்புகளில் கர்ணனியானவள் 

கிறுக்களுக்கும் 
பிடித்த ஓவியம் 
என் ஆச்சு பாப்பா,

கரும்புக்கு 
இனிப்பு ஊட்டுவாள் 
அவள் கடிக்கையில் 
வழியும் சாறுபோல ....

சிறுபுள்ளிகள் 
அழகிய கோலமாவதை போல 
இவள் புள்ளியாக தோன்றிய 
எங்கள் தேவைதை (ஏஞ்சல் )

மகிழ்ச்சியில் 
பெருகும் ஆராய் 
எங்கள் வீட்டில் 
இவளோட நினைவு 


அச்சு எங்கள் மகிழ்வின் 
அடையாளம்....










அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....