தேய்பிறை இல்லா முழுமதி நீ..
ஜன்னலோர இருக்கையில் நான்..
நடந்து வரும் பூங்கொத்து நீ..
ஏந்துகின்ற கைகளாய் நான்..
பொங்கி வரும் அலைகளாக நீ..
கால் நனைக்க காத்திருக்கும் நான்..
உனை வர்ணிக்க வார்த்தைகள் தடுத்ததில்லை-என்
குற்ற உணர்வே தடுக்கும்..
இருந்தால் என்ன??
என்றைக்குமான பேரழகி நீ..
எழுதி தீர்க்கும் கவிஞன் நான்..