புதன்

உச்சிக்குளியல்

உளிகளின் விலாசம்

மிச்சத்தை மட்டும் உண்டு, 
மிஞ்சியதை மட்டும் சேமித்து,     
வீசப்படும் விதைகளுக்கும் 
விலாசம்தரும் பூமாதேவியின் 
அன்பைபோல்..!!!

அடுத்தவர் ஆற்றும் குறைகளில் 
நம் பிழையை உளிகொண்டு செதுக்கி, விடாமுயற்சியுடன் 
சாதனை படைப்போம்..
போதையில் வீழ்ந்தவனுக்கும்..! 
பேதையை சுமந்தவளுக்கும்..!!
புது விடியல் இங்கு பிறக்கும். 

சுமைகளில் வீழ்ந்தும் 
சுகமாய் எழுபவர்கள் நாம்..!!

பேரிடரால் நடுத்தெருவிற்க்கு 
தள்ளப்படுகிறது நடுத்தரவர்க்கம் 
எனும் நம்வாழ்வு??

விடியலைத்தேடி 
விலாசம் தொலைத்தும்..!!

மீட்டுவிட்டேன் 
வீட்டையும் விலாசத்தையும்..!!
 *நம்பிக்கை உளிகளால்* ...

    - மாலதி ராமதாஸ்

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....