முற்றுபுள்ளியில் சிறக்கும் ஆசைகள்
தோன்றலின் எண்ணம் திரை-எதற்கு??
வானுக்கும் ஆழிக்கும் எல்லை-எதற்கு??
வானுக்கும் ஆழிக்கும் எல்லை-எதற்கு??
வாலிபத்தை தொலைத்துபின் தேடுவது-எதற்கு??
காலாவதி ஆனபின் காலத்தை தேடுவது-எதற்கு?
ஆசை அடக்கியப்பின் ஏக்கம்-எதற்கு??
தகுதி இருக்குமாயின் தயக்கம்-எதற்கு??
மீளா கனவுகள் தடை-எதற்கு??
வையகத்தில் வெற்றிடம் பல-அதில்
தடம் படிக்க அச்சம்-எதற்கு..????
நீ முற்றும் இடத்தில் தொடரும் சிறகுகள்..!!!
ஆசைக்கு வேலி எதற்கு...!!!
- மாலதி ராமதாஸ்
கவிக்குயில் மதி எனும் புனைபெயரில் கவியெழுதி வருமிவர் முண்டாசு கவிதையில் வீழ்ந்து, மீசையில்லாகண்ணம்மாவாய் கவித்திட்டுபவள்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக