திங்கள்

உன் இரக்கத்தில் மட்டும் பிறப்பதில்லை மனிதநேயம்


இயற்கையின் முதற் படைப்பே மனிதன்
சிட்டுக் குருவியில் துவங்கி செல்லப் பிராணிகள் வரை 
அதன் இனத்திலிருந்து பிரித்து கூண்டில் அடைக்கின்றோம் 
இதுமனிதன் காட்டும்நேயமென கர்ஜிக்கின்றோம்!
 அன்பனைத்தையும் அள்ளித் தந்தவளை,
அனாதை இல்லத்திற்கு தாரை வார்க்கின்றான்
சுமை தாங்கும் பூமா தேவியை,
வேதிப்பொருள் நாடி துளையிடுகின்றான்.
பிறக்காத பிள்ளைக்கு ஏங்கும் தாய்க்கு 
அன்பளிபாய் அழைச்சொல் மலடி
சிப்பிக்குள் முத்தாக,
சிற்பியின்-சிந்தனைக்கேற்ற சிலையாக 
எவ்வுயிரிடத்தும் குறைவில்லா-அன்பை 
நிறைமனதுடன் காட்டுவதன்றோ 
மனித நேயம்!!!!


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....