காதலர்கள் தூவிய விதைகள்
விளையாமல் போனது
நீ நட்பால் விதைத்த
மனம் இருக்கையில்
என்னிடம் ,,,,
வலைகள் பல இருப்பினும்
என்றும் நீ எந்தன் சிலந்தி வலையே நீ எனக்கு
விழும்போது எழவும்
தாங்கிப்பிடிக்க உந்தன்
கரமும்
உந்தன் தோலும்
தொடாமல் தொட்ட
ஞாபகம்
இவையும்
கனவா இன்று!!!!
உன் கண்முடி இறகில்
ஏறி கப்பல் பயணம் செய்ய ஆசை
உன் வீழி மூடுகையில்
புருவங்களை அழகை கண்ட பின்
தோற்றுப்போன மயிலிறகை போல
நான் திகைத்து நின்றேன்
உண் நெற்றி அருகில் சென்று
சிறுபுள்ளி வட்டவண்ணமிட ஆசை,,,
கனவில் ஒரு காவியத்தலைவன்
அகம் அழகென ஒருவன்
புறம் அழகாய்
பெற்ற இன்னொருவன்
அகமும் புறமும் அழகாய்
பெற்ற இரட்டை சகோதரர்கள் இருவர்
அகமும் புறமும் அழகில்லா
நிஜாமொருவன்
இவைகளில் எவன் அவன்
என்னவன்,,,,,,,,,,,,,, கனவின் கள்வன் நினைவின் நிஜமாணவன்,,,
விழி திறக்கையில் மறைந்துபோன
காவிய தலைவனே!!!!
மறுகணம் விழிகளை
மூடிக்கொள்கிறேன்
நீ மறுகணம் வருவாய்
எனும் நம்பிக்கையில்,,,
புதன்
பாட்டொன்றை எழுத நினைக்கிறன்
பேனாவின் மையிற்க்கு
கண்ணீரை நிரப்பியே
கடற்கரையில் எழுதினேன்.
தண்ணீருடன்
காணாமல் போனது
கண்ணீரும்
சனி
ஆசை ஆசை !!!
ஆசைக்கும் ஆசை வரும் என் ஆசையின் பட்டியலை பார்க்கையில்!!!
பட்டியலில் மட்டுமே
எழுதி என் ஆசையினை
ரசிக்கிறேன்
பார்க்க முடிந்த கண்களுக்கு
வாங்க முடியாத பொருள்போல ,,,,,,
வாங்காமல் போன ஒன்று
பிடித்துப்போக.....
வாங்கிய பொருளும்
பிடிக்காமல் போக ,,
வியாழன்
கடனே வறுமை விவசாயி!!!!
ஆழ்துளைஇட்டு வெட்டிய கிணறும் வற்றிபோனது ஒரு கணம்
தண்ணீர் பஞ்சமிருந்தும் பூமாதேவிக்கு பூஜை இட்டு நற்றேன் நானும் நாத்து
வாய்த்த நாற்றும் நார்மனியாக வளர்ந்தது
அறுக்கும் கணம் வீணாகி போகியது
வெள்ளத்தில் நெல்மணிகள்
எதனை நெல்மணிகளுக்கு
குடையிடுவேன்நான்.
வாங்கிய கடனுக்கு விலை நிலம் பயிராகும் பின் காசாகும் என பயிருக்கு உண்ண உணவு கொடுத்து என் உணவை விரதமாக்கினேன்...
விவசாயம் நம்பிய நான்
பட்ட துயரம் என்னோடு போக
மற்றொரு கடன் வாங்கி
என் பிள்ளையை
படிக்க வைத்தேன்
செலவு செய்ய சிறு காசு இல்லாமல்
போகி மனைவியின் தாலியும்
அம்மாவின் காதின் கடுக்கா கம்மாளையும்
அடமானம் வைத்தேன் ...
என் பிள்ளை கடிதம் கண்டு
ஆனந்த கண்ணீருடன்
பதில் கடிதம் அனுப்பினேன்
காலனி பிஞ்சுபோன
தருவாயில் பிள்ளைக்கு
ஷூ வாங்கி தந்து
அவன் காலில் அணிய கண்டேன்
முதலாளி
கனவே கண்ட நான்
இன்று எதோ ஒரு
கணத்தில் மறுபடியும்
வட்டிகளில் கடன்
வாங்கி பிள்ளை
திருமணங்களை
நடத்தினேன்
நல்லபடி
என் வயதும்
வருவதை கடந்தே !!!
விடியலை தேடிய நான்
என்னையே தொடர்ந்த
இருட்டறை :)
வாழ்வின் போராட்ட காலமாய்
என் விவசாயம் ..
புதன்
பேதை பெண்டீரின் வரம் !!!
குரல் வளத்தை,
அழகாய் பெற்றேன்
குரலினால் சிறந்தேன்
பலர் பாராட்டுகையிலே
பல பரிசும் பெற்றேன்!!!
இன்னலென இடையூறாய்
நீ வெறுக்க,,
எல்லாருக்கும் பிடித்த
குரலை உன் செவிகள்
கேட்க மறந்தது ?
என்னையும் இறைவநடி
சென்று ஊமை வரம்
வேண்டி மன்றாடியதே
வெள்ளி
லட்சியம்
அலைந்து திரியும்
எந்தன் மூளைக்கும்
கடிவாலமாய் நானும்
என் எழுதுகோளும்
முன்கூட்டியையே
செய்முறை குறிக்கோள்!!!
புல்லாங்குழல் காதலி
என்னை அறியாமலே என்னோடு
நெருக்கமானாய், ஆதலால்
என்னவோ எந்தன் எண்ணங்களை
உன் பாஷையிலே வாசித்தேன்!!!
என் கவலையின் பொக்கிஷமாய்
நீயும் என்னோடு வாசிப்பினை
சொர்கமாக்கினாய்
கவலைகல் தொலைந்துபோனது !!!
மூச்சுக்காற்றுக்கும் உருவம்
உண்டு என்பதை உன்னை
வாசிக்கையிலே அறிந்தேன் !!!
காற்றுக்கும் காதல் சொல்லி தந்தையோ
எனக்கும் அழைப்பு விடுத்து
வாசிக்க அழைத்தாயோ !!!!
காற்றாய் மாறி உன்னை காதல் செய்யவா
இப்படிக்கு புல்லாங்குழல் காதலி
அக்காவின் ஆசைக்காக ஆலய வழிபாடு
அக்காவின்ஆசைக்காக
ஆடிமாதம்
ஆலையவழிபாடு ....
நல்லபடியேஆண்டவனின்
அருள்பெற்றுபூசாரியின்
அன்பளிப்பாய்சாமந்திபூ....
🕉ஒற்றைகாம்பில்
ரெட்டைமலர்கள் ....💐
பின்னரேபுரிந்தது
ஆடிகிருத்திகையின்
ஆலயவழிபாடு
முருக பெருமானுக்கென்று 🔱☺☺☺
புதன்
பெண்ணின் வயது 25.(தெரிவை பருவம்)
பெண்களின் பருவம்
படிகளின் வரிசையில்
நானும் கடந்தேன்,,
சில பருவ வயதினை
மழலையாய் இருந்த
நானும் குமாரி ஆனேன்!!
பேதையை கடந்தேன்
பெதும்பையை கடந்தேன்
மங்கையும் கடந்தேன்
மடந்தையையும் கடந்தேன்
அறிவை கடந்தே
தெரிவை தேட தொடங்கி
தேடலோடு வாழ்வின் அடுத்த
படிகளை ஆரம்பிக்கிறேன்!!!
எதிர்பார்ப்பும் அதிகமாகும் பருவம்
கடந்து வந்த பாதைகள்
24 வருடங்களை
திரும்பி பார்க்கிறேன்
ஆனந்தகண்ணீரோடு
பகுத்தறிவும் பிறந்தது இன்று
பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!
வாழ்க்கையின் மாற்றங்கள்!!
நினைவில் வரும் யோசனைகள்
மாறிப்போன வாழ்வின் பாதைகள்
பள்ளி கல்லூரியில் தொடங்கிய
மாற்றங்கள் அலுவலகத்தில் முடிந்ததே ??
பண பையில் பத்துரூபாய் (பர்ஸ்) தரும்
இன்பத்தை மாதவருமானத் தால்
பூர்த்தி செய்யமுடியவில்லையே??
பெற்றோரின் அழகிய பரிசாய்
பண்டிகை ஆடைகளின் மகிழ்ச்சியை
பிராண்டட் (முத்திரை பதித்த ஆடைகளால்
ஈடுகட்ட முடியவில்லையே அதிருப்தியை
சமோசாவின் மாற்றம் பீஸ்ஸா ஆனதே
பசியும் இல்லாமல் போனதே,,
நடைபயணம் மிதிவண்டி ஆனது அன்று
மிதிவண்டி காணாமல் போய் பேசினோ
இருசக்கர நான்கு சக்கரம் ஏரோபிளானெ எலிகாப்டர் ஆனதே
தேநீர் கடையும் காலவரையில்
Brand ஆகி காஃபே காபீ ஆனதே
தொலைபேசி கைபேசியை
போய் டச் ஸ்க்ரீன் ஆனதே
கணினி போய்
மடிக்கணினி வந்ததே
முதலும் முடிவுமாய் --.
கொத்து கொத்தாய்
திராட்சை போல
குழுவாய் திறிந்தோமே
கல்லூரியில் அன்று ...
எவர் கண் பட்டதோ
தேனீக்களின் கூட்டம்
மற்றவரின் பார்வை ருசியிலே
கறைந்துபோய்விட்டதே ,,,,
இன்று கல்லூரி நண்பர்கள் போய்
அலுவலக சக ஊழியர்கள் உடன் நானும்
என் பொறுப்புகளை தொடர்ந்து
ஆசைகளை மறந்து
லட்சியத்தை தொடங்கி
என் பயணம் ஆரம்பமாகியதே!!!
செவ்வாய்
இயற்கையில் பெறப்பெற்ற செயற்கை!!!
பறக்க தெரிந்த பறவைக்கு சிறகு உடைந்ததோ
துள்ளி திரியும் மானுக்கு பாதங்கள் நொண்டியானதோ
காலையில் கரையும் காக்கை இன்று மௌன அஞ்சலியோ
ஓடும் நதிகள் இன்று ஒரே இடத்தில் கூட்டணி மறியலோ
மலைகள் நிற்க மறந்து நடராஜனிடம்
ஒத்திகை நடனமிடுகின்றனவோ
சொல்ல தயக்கம் வந்தேன்
சொல்லிவிடவே வார்த்தைகள் எனக்கும் தடையாய் ஆனதே
அவையால் நீ தடுமாறி தடமாறி இறந்துபோனயே
இயற்கையில் புகுந்த செயற்கை சிந்தனை....
நட்பிலோரு கண்ணாமூச்சி ஆட்டம்
பட்டாம்பூச்சியின் இறகை போல உந்தன் அரவணைப்பு சிறகுகலாய் உன்வரிகளின் உணர்ச்சி வாக்க்கியங்கள் கன்னித்தீவு பெண்ணாய் நானே நட்பிலோரு கண்ணாமூச்சியின் ஆட்டமாய் நீயே (கண்ணை மூடி ஆடுகையிலே ஒழிந்துபோனாயே ) பின்னரே அறிந்தது கனவு என்று
வெள்ளி
அனிதா MBBS கனவின் கல்லறை !!
உறங்க மாளிகை இல்லறமில்லை
குடிசை ஓலை ஓட்டையே
போதுமென்றேன்
உடுக்க உடை இல்லை
கிழிந்த ஆடையை
தைத்து போத்திகொன்டேன்
பள்ளி பயில நல்ல
பள்ளிக்கூடமில்லை
மரத்தின் நிழலே
தஞ்சம் என்றேன்
உன்ன உணவின்றி
கால் வயிறு கஞ்சியை
பகிர்ந்து உண்டோம்
குடும்பத்தோடு
குளிக்க அறைகள் இல்லை
தென்னங்கீற்றிலே
குடிலிட்டு குளித்தேன்
உறங்குவதற்கு பஞ்சு
மெத்தை இல்லை
பழைய கிழிந்த
பாய் போதுமென்றேன்
இதனை பொறுத்து கொண்டும் மூலதனத்தை உயிர் மூச்சாக்கி படித்தே ன் மருத்துவ பட்டம் பெற
மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சியடைந்தேன்
ஆ னாலும் மருத்துவராக
வேண்டுமென்ற
என் கனவினை சாம்பலாக்க
நீட் என்ற ஒரு தேர்வில்
தோற்றுப்போனேன் என் இலட்சியத்தை தோல்வியடைந்தது என் குற்றமா ? படிப்பில் வேறுபாடுகளை புகுத்திய அரசின் குற்றமா??
வாழ்வில் முன்னேற இருந்த
ஒரு பாதை படிப்பதே ,
அவற்றிலும் அனிதா MBBS-யின் ஆசை இன்று
பெயரின்பின் தோல்வியின் வெற்றிடமா ??
நிற்பதை பார்க்க இவ்வளவு காலம்
சிரமத்தை கண்டேன்,
இறந்த உடலாய் இருப்பதை விட
இறந்து போய் உயிராய்
பல ஆத்மாக்கள் கனவை நிறைவேற்ற
என் இறப்பில் பலர் கனவு நிறைவாக
சில ஏழை எளியோர் நெஞ்சங்களுக்கு
பாதை கிடைக்கும் என்று
நம்பிக்கையோடு செல்கிறேன் ,,,,
வான்மதி சோலையிலே கதிரவன் மறந்துபோய்
கீழிறங்காமல் இரவில் உதிக்க
கதிரவனின் தவறினை
மறைக்க பகலில் நிலவும்
தோன்ற காட்சிகளும் மாறிப்போக
மறித்து கொண்ட காற்றுகளும்
அகிம்சைவழி மழையும் கடற்கரைநோக்கி ஒட்டக்கூட்டம் பாலைவனத்தை தேடி மீன்களும்
மாற்றங்கள் காரணம் விரைவிலே :)
ஏழ்மை தெரியாத வசந்தமழலை!!
மழலை பருவத்தில்
மாரியில் நனையும்
ஆசையை பெற்றோரையும்
ஏமாற்றி நனைந்த மகிழ்ச்சி
குடிசை ஓட்டைகளுக்கு
நன்றி (குறும்புமழலையின் வசந்தம்)
எனக்கே எனக்கா !!!!
எழுதுகோளின் துணைகொண்டு
முதன் முதலாய்
எனக்கென ஒரு கவிதீண்ட
எண்ணுகிறேன்
நாட்குறிப்பு தாளை
எடுக்க மறந்தபடியே ,,,
பெயரில் ஆரம்பமாகும்
என்நாமத்தோடே
சார்ந்தே என் சார்பேழுத்தான
எந்தன் துணை எழுத்து
என் தந்தை பெயரால் மட்டுமே,,,
எனக்கென ஒரு இணையே
தேடலில் தேடினேன்
இணை எழுத்தை
மறந்து போனது
எழுத்தோடு சேர்ந்த
எந்தன் எண்ணமும்
காற்றில் கறைந்துபோகும்
மேகமாய் மழை ,
எந்தன் கனவும் நொடியில்
கரைந்தது காரணமின்றி :)
பெண்!!!!
எல்லோரும் அறிந்தது
நான் மட்டும் அறியாதது
எல்லோருக்கும் கிட்டியவை
எனக்கு மட்டும் கிட்டாத
எட்டா கனி
என்னை மறந்தே உன்னை தேடுகிறேன்,,, சுரியனின் தேடல் சந்திரன் ஆனால் ? தென்படாத தேடலாய் ஒரே வானில் நீ எனக்கு!!!!
வியாழன்
தாஜ்மஹால் காதல் ...
புகைப்படங்களின் புன்னகையில் வாழ்ந்துகொண்டு இருக்கிறது தாஜ்மஹால் காதல் ... பெற்றவரை பார்க்க கணநேரம் இல்லாத தருணத்திலும் புண்ணியஸ்தலங்களாக காதலர்களின் கனவு கோட்டையை தேடியே வாழ்க்கை பயணம் ஆரம்பமாகிறது,,,,
மரப்பாச்சி பொம்மை
உள்ளங்களில் அழகை காணாத மானிடர்களுக்கு ஒரு பொம்மையின் அழகிய கடிதம்உருவமும் அழகு உள்ளமும் அழகு செதுக்கிய சிலையாய் ,அன்பை மழையாய் பொழியும் மழலை ,,மகிழ்ச்சி குதுகளம் ...உறுப்புகளும் உள்ளமும் இருந்தும் உணர்வினை காட்ட முடியா மரக்கட்டைகளால் செதுக்கபட்ட சிலையாய் நான் !!!என்பதே பொய்யால் ஆன உண்மெய் (மெய் பொம்மை !!!!)
புதன்
தேவைகளும் தேவையற்றதும் !!!
குப்பைகளும் பொக்கிஷமானது அன்று,
பொக்கிஷமும் குப்பையானது இன்று.
வியாழன்
அலைபேசி !!!
முகம் பார்த்து பேச முடியாமல்போன தருணம் அயல்நாட்டில் அன்று பிரிவால் வாடிய நாட்கள் வலிகளின் துடைப்பானாய் அலை பேசி வீடியோ அழைப்பு இன்று !!!!!
இளைஞர்களின் இன்பத்தை ஈர்க்கும் ஈர்ப்பான் குறுந்தகவளின் மூலமே ரகசியங்களை குறுஞ்செய்தியாய் பண்டம் மாற்றி கொள்ளும் கைபேசி தகவல் தொடர்பு சாதனம்..
குறைகளை நிறையாக, கறுப்பர்களை நிறமாககாட்ட சோகத்தில் மூழ்கியவரை சந்தோஷமாக்க!!!!நன்மைகளும் தீமைகளும் உன்னுடனே என்பதை உணரவைக்கும் சில தருணம் !!!!! இக்கட்டான நேரங்களில் இன்பத்தை அளிப்பாய் சந்தோஷ தருணங்களில் சங்கடங்களை அளிப்பாய் :)
புதன்
தொட்டால் கொட்டு
தவறுகளை திருத்துகையில் புதுமை பெண்ணின் புது வேடம் குளவிக்கூடு
விடுதி முதல் வீடு வரை
மகிழ்ச்சி பொங்கிய தருணம் என் இதயத்தில் அண்டை மாநிலத்தின் விடுதியில் இருந்து இல்லத்திற்கும் செல்லும் கணம் அடடா !!!!!!
சத்தங்களும் வரும்
முகமும் அழகு பிறக்கும்
பொன்சிரிப்பில்,,,,,
டாஸ்மார்க் !!!!!
கிராமங்கள் தொடங்கி
நகரங்கள் வரை
உனக்காக ஒரு கூட்டம்...
பகடை ஆட்டமும்
தோற்றுப்போகும்
பாரதத்தில் இன்று,,
வீட்டின் அணைத்து
பொருட்கள் தொடங்கி
நகை பணம்
இல்லறத்தின் இன்பங்களை
அனைத்தும் அடகு வைக்கும்
ஒரே இடம்
டாஸ்மார்க்கே முதலிடம் ,,,
காலத்தின் கொடுமை பட்டினி
விதைப்பதால் நான்
பட்டினி ஏழை,,,,,
விதைக்காததால் நீயோ
பசியில்லை பணக்காரன்,,,,
இறைத்த அன்னத்தினை
குப்பையில் வீசுகிறாய்
ஆனாலும்
உனக்கு பசியில்லை
பசியாற உணவிருக்கு
உன் இல்லத்தில் ,,,
பசிக்கும் எனக்கு
கால் வயிறு காஞ்சுகூட
வயக்கவில்லை....
மழையின் அருமை
கவலைகளில் மறந்து போன கண்ணீர் துளிகள்,,, ஆரம்ப மாறியில் அழுகையில் தொடங்கி ஆனந்தமாய் ஆட்டம்,,,,
முற்று புள்ளி...
முற்று பெற விருக்கும் மாந்தரின்
முகவரியாகவும்
முகவரியாக வெளிவரவிருக்கும்
பிஞ்சுக் குழந்தையைக்கு
முற்றுப்புள்ளியாய்
கருவிலே முற்றுபுள்ளி......
மரணம்
வேண்டியவரை காக்க வைக்கும்
வேண்டாதவரை கூட்டி செல்லும்
கிணற்றின் ஆழ்துளையில்
தெரியும் நிலவின்
ஒளியைப்போல
எத்தனை முறை முயன்றாலும்
கிட்டாதவை மரணசுகம்....
வேதனையில் இவ்விதியை
எடுக்க முயற்சிக்கும்
வலியை அனுபவித்தபின்
வாழ நினைக்குமுன்
உயிப்பிரியும் எதிர்பாரா
திருப்பங்களால் எமர்த்தனின்
ஆசைக்கு இணங்க ,,,,,,,,,,
புதன்
கனவு
கோடையில் குளிர்
குளிரில் வெப்பம்
வெப்பத்தில் மழை
மழையில் சூடு
குளிரின் பனி
பணியில் மழை
மழையில் குடை
குடைக்குள் தொலைந்து
போன சில நொடிகள்
நொடிகள் அனைத்தும்
நினைவால், நினைவுகளே
கண்ட கனவா
மழை வழியே
ரசிக்க போகும்
தூறலின் மிஞ்சிய
இலை சொட்டு
நீர் ஆஹா
அழகிய இயற்க்கை
சந்ததி
எதிர்பார்ப்பு
எதிர்ப்பார்க்காமல் இருக்க சொன்னதால் என்னவோ என் எதிர்பார்ப்பும் எதிர்பார்க்கிறது உங்கள் வரவை யாரோ ???
ஞாயிறு
அன்புள்ளம் கொண்ட அப்பாவிற்கு,,
சிறுபிள்ளை முதல் மகளை தாய் என கருத்துபவரே மகளிடம் நெருங்கி பழகி ஆரிரோ தாலாட்டு தொடங்கி அன்பை முத்தம், உறக்கநேரங்களில் சிறு கதைகளையும் கூறி கொஞ்சல் செய்பவரே சிறுவயதில்,,, கால மாற்றங்களால் உம்மை விட்டு தள்ளி நடக்கவும் கற்று தருகிறாய் என்னை பற்றி விசாரணை தாயிடம் கேட்கிறாய் கொஞ்சலும் தாலாட்டும் தரமறந்து பிள்ளையின் நலனை,, கருவிலே சுமக்கும் தாயுக்கும் நிகராக இரு உயிரை வாழ்நாள் முழுவதும் உம்மில் சுமப்பவரே வாழ்நாள் முழுவதும் உறக்கமில்லாமால் ஓடி ஓடி தேய்ந்தும் தேயாமல் மனைவிக்கும் பிள்ளைக்கும் அமிர்த உணவளித்து கால் வயிறு கூட நிறையாமல் உழைப்பவரே,,, பிடிக்காததையும் பிடித்தவாறு கொடுப்பவரே 60 வயதானாலும் ஓய்வின்றி உழைத்து எவை கேட்டாலும் அளிப்பவரே அன்பாய் மாயை உலகையை வேண்டுமென்றாலும் வாங்கித்தரவிருக்கும் பாச தந்தையே எப்படி சொல்வேன் எண் நன்றியை,,, ஆயிரம் கேள்விகள் கேட்டாலும் சலிப்பின்றி பதிலளிப்பாயே !!! திறமைகளை பலர் பாராட்டுகையிலே அறிகிறேன் இவையனைத்தும் அன்று நீர் சீராட்டி ஊட்டியவை என்று,,, உன்னை போல நல்ல தோழன் இப்வுபூலகில் எங்கும் இல்லை நான் உன்னை தந்தையை பெற்றதால்,,, மகள் கேட்டதை அனைத்தையும் பெறுகையில் அவள் மகிழ்ச்சிப்போல தருகையிலே உன் சந்தோசம் !!! சத்தியமாய் சாத்தியம் இல்லை அப்பா உன்னை புரிந்து கொள்ள !!! இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் அப்பா!!!
வினாக்களுக்கு சகிக்காமல்
விடையளிப்பான்
விடைகளுக்கு சில நேரம்
மௌனம் காப்பான்
வேறுபாடுகளை பக்குவமாய்
புரியவைப்பான்.. அன்பு தந்தை ...
சனி
பாரதியார்
தமிழினை ரசிக்க வைத்தவன்
குழந்தைகளை அவர் போக்கிலே
சென்று ஒழுக்கத்தினை கற்பித்தவண்
மகளிரை தெய்வாமாய் பார்த்தவன்
ஆயிரம் அன்புபெயர் வைத்து
அழைத்தாலும் மகளிரை கவிநயமுடன்
தமிழ்நயம் கொண்டு கண்ணம்மா
என்று அழைக்கையிலே மகளிர்
அனைவரும் புதுமை பெண்ணாய்
மறுபிறவி கொண்டனர் புதுநாமத்தினால்
பெண்களின் மனதை காதல் கொண்டவன்
கவியால் பாரதி ,,,
சாதி மதம் பார்க்கும் தன் மனைவியிடம்
இருந்தும் மற்ற மதத்தினவர்களுக்காக
பாடல் வரிகளை தன் கைகளால் எழுதியவன்
வள்ளுவனும் சொன்னான்
இரு வரிகளில் திருக்குறளை
பாரதியும் சொல்கிறான்
பல வரிகளில் வழக்கை பாடத்தை
சொல்லுதற்குரிய சொல்லியவண்ண
கவிநயத்துடன் அனைவரின்
ஆர்வத்திற்கு எட்டாற்போல,,
உள்ளங்களிலே அழுகை கண்டவன்
ஓய்வின்றி உழைத்து ஓய்ந்து போனான்
பாசத்தினை அளித்தான்
விலங்குகளிடமும்
தினசரியும் தான் உண்ணவிருந்த
வாழையை யானைக்கு அளித்து
விரதங்களை மேற்கொண்டான்
மதம் கொண்ட யானை
நன்றி விசுவாசம் இன்றி
பாரதியை மிதித்து உயிரை பறித்தது
சிறுவயதில் இருந்தும்
பல உள்ளங்களில் இன்றும் உயிருடன்
வாழ்ந்து வருகிறாய்
உன்கவிகளை வாசிக்கையில்
மறுபிறவி கொண்டாய்
அணைத்து மகளிரும்
முதல் காதலனாக
உன்னை நினைக்கையில் ...
மொழிகளையும் ரசிக்கிறான்
தமிழை காவியம் ஆக்கியதால்
உன் இருவிழி கண்கள்
முறுக்கு மீசை
அழகான உதடுகள்
ரசனை நிறைந்த
மூளை
அவற்றை அழகை வெளிப்படுத்தும்
உந்தன் கைகள்
பேனாமுனை பிடி அழகு
அடடா இவை அல்லவ்வா
என்னவன் பாரதி,,,,,
மன்னிப்பு
தவறு செய்யவில்லை என்று அறிந்தும் மன்னிப்பு கேட்க சொல்கின்றன செய்யாத தவறுக்காக ,,, தவறு செய்தவர்கள் மன்னிப்பு கேட்டும் மன்னிக்க மறுக்கின்றன விதிகளின் சோதனைகளை மனித மதி வெல்லுமோ (கொன்றான் உயிரை அன்று தாருங்கள் சிறை தண்டனை கொசுவை கொன்றதற்கு தவறில் என்ன சின்னவை பெரியவை உயிரை கொன்றால் குற்றவாளியன்றோ
காகிதம்
என்னை போலவே வெள்ளை காகிதம் எவர் வேண்டுமானாலும் எழுதி செல்கின்றன அவர்களது தேவையை என் ஆசை என் தேவை என்ன என்பதை கேட்க மறந்து !!!
நாளிதழ்
என் லட்சியத்திற்காக ஒரு நாளை ஒதுக்கினேன் ஒதுக்கிய நாளையும் குப்பையில் கிழித்து வீசுகையில் அறிந்தேன் ,,,, லட்சியத்தை நான் மறந்தாலும் நாளிதழ் தன் கடமையை எப்பொழும் மறப்பது இல்லையென ,,,,,
மின்சாரம்
தெ ருவிளக்கின்
ஒற்றை அழகன் :)
மாணவ மாணவியரின்
இருட்டறை துயரங்களை
போக்கி வாழ்வில்
வழிகாட்ட வந்த தோழன் :)
உன் ஒளியால்
மற்றவர் வாழ்வின் ஒளிக்காட்டியாய்
திகழ்கிறாய் !!!
கடவுள் படைப்பின்
கண்களுக்கு
பொருத்தமான
இன்ப காட்சி மின்சாரம்
படிப்பு முதல்
வேலை வரை
பிறப்பு முதல்
இறப்பு வரை
வழிநடத்த ஒளியாய்
நீயே தேவை !!!
கற்காலங்களில்
கணவனின்
மறைவிற்கு பின்
ஏறும்உடன்கட்டைகளை பிரதிபளிக்கும் மானிட உயிரின் உயிர் கொல்லி மறுபிறவி சிகரெட்
சினத்தினை குறைக்க கவலையை மறைக்க தனிமையை போக்க தனக்கு தானே ஒரு
பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டேன்
சிகரெட்
எமதர்ம ராஜாவின் அன்பு பிறந்தநாள் பரிசு இறக்க போகும் நாளுக்காக முன்கூட்டியேசிகரெட் !!!
தனக்கு தானே சூனியம் சிகரெட்
x
நிலா!!!
அழகிற்க்கு ஈடு இல்லா பேரழகி,
இயற்க்கை வண்ணகோலம்,
வானினை பார்க்க வைத்த வள்ளியவள்,
குளிர்ச்சி நிலை வசந்தம்,
கோடைகாலத்தில்,
கிராமப்புற மக்களின்
நிஜப்பயண சுற்றுலா ,,,,
ஏழையின் இல்லம் தேடி வந்த
இன்பசுற்றுலா தேவகன்னி ,,,,