புதன்

உச்சிக்குளியல்

உளிகளின் விலாசம்

மிச்சத்தை மட்டும் உண்டு, 
மிஞ்சியதை மட்டும் சேமித்து,     
வீசப்படும் விதைகளுக்கும் 
விலாசம்தரும் பூமாதேவியின் 
அன்பைபோல்..!!!

அடுத்தவர் ஆற்றும் குறைகளில் 
நம் பிழையை உளிகொண்டு செதுக்கி, விடாமுயற்சியுடன் 
சாதனை படைப்போம்..
போதையில் வீழ்ந்தவனுக்கும்..! 
பேதையை சுமந்தவளுக்கும்..!!
புது விடியல் இங்கு பிறக்கும். 

சுமைகளில் வீழ்ந்தும் 
சுகமாய் எழுபவர்கள் நாம்..!!

பேரிடரால் நடுத்தெருவிற்க்கு 
தள்ளப்படுகிறது நடுத்தரவர்க்கம் 
எனும் நம்வாழ்வு??

விடியலைத்தேடி 
விலாசம் தொலைத்தும்..!!

மீட்டுவிட்டேன் 
வீட்டையும் விலாசத்தையும்..!!
 *நம்பிக்கை உளிகளால்* ...

    - மாலதி ராமதாஸ்

மனம் தேடும் மனித நேயம்

சனி

இனிய முதுநெல்லி ..!!

 என் இம்சை பாட்டி!!! 


நிலவை படைத்தவானம் நீ
என் ருக்கு பாட்டி,,,,
 
சேவல் கூவலுக்கும்
காக்கை கரைதலுக்கும்
முன்னெழுந்து ஒலி இடுவாயே (சத்தம் )
அவையே எங்கள்  
இம்சையான இனிய சுப்ரபாதம்..!!!
அதிகாலை சூரியனுக்கும் 
அந்தி மாலை நிலவுக்கும் 
நேரம் காட்டும் கடிகாரமே
உந்தன்பொற்பாதங்கள்,
சுறுசுறுப்பின் -சிகாமணி 
கண்காணிப்பு புகைப்பட 
கருவிகலோ உந்தன் இமைகள் 
 
படிக்காமல் பட்டம் பெறும் மருத்துவச்சி 
எஞ்சியதையும் தானம்செய்து 
கஞ்சியையே புசிக்கும் கொடைவள்ளி 
 
ஓய்வெடுக்கும்
உன் வயதும்(85)
உன் சுறுசுறுப்பில்
ஓய்வெடுக்க மறுக்கிறது..!!
 
மதிமங்கும் வயதிலும் 
மழலையாயும் 
பதினெட்டு வயது 
பட்டாம்பூச்சியாய் 
வலம் வருபவள் 
என் ருக்கு பாட்டி...
 
                                                     
 
 

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....