புதன்


பெண்ணின் வயது 25.(தெரிவை பருவம்) 











பெண்களின் பருவம்
படிகளின் வரிசையில்
நானும் கடந்தேன்,,
சில பருவ வயதினை
மழலையாய் இருந்த
நானும் குமாரி ஆனேன்!!

பேதையை கடந்தேன் 
பெதும்பையை கடந்தேன் 
மங்கையும் கடந்தேன் 
மடந்தையையும் கடந்தேன் 
அறிவை கடந்தே 
தெரிவை தேட தொடங்கி 
தேடலோடு வாழ்வின் அடுத்த 
படிகளை ஆரம்பிக்கிறேன்!!!

எதிர்பார்ப்பும் அதிகமாகும் பருவம் 
கடந்து வந்த பாதைகள்
 24 வருடங்களை 
திரும்பி பார்க்கிறேன் 
ஆனந்தகண்ணீரோடு 
பகுத்தறிவும் பிறந்தது இன்று 
பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!! 




வாழ்க்கையின் மாற்றங்கள்!!













நினைவில் வரும் யோசனைகள் 
மாறிப்போன வாழ்வின் பாதைகள் 

பள்ளி கல்லூரியில் தொடங்கிய 
மாற்றங்கள் அலுவலகத்தில் முடிந்ததே ??

பண பையில் பத்துரூபாய்  (பர்ஸ்) தரும் 
இன்பத்தை மாதவருமானத் தால் 
பூர்த்தி செய்யமுடியவில்லையே??

பெற்றோரின் அழகிய பரிசாய் 
பண்டிகை ஆடைகளின் மகிழ்ச்சியை 
பிராண்டட் (முத்திரை பதித்த ஆடைகளால் 
ஈடுகட்ட முடியவில்லையே அதிருப்தியை 

சமோசாவின் மாற்றம்  பீஸ்ஸா ஆனதே 
பசியும் இல்லாமல் போனதே,,

நடைபயணம் மிதிவண்டி ஆனது அன்று 
மிதிவண்டி காணாமல் போய் பேசினோ 
இருசக்கர நான்கு சக்கரம் ஏரோபிளானெ எலிகாப்டர் ஆனதே 

தேநீர் கடையும் காலவரையில் 

Brand ஆகி காஃபே காபீ  ஆனதே 

தொலைபேசி கைபேசியை 
போய் டச் ஸ்க்ரீன் ஆனதே 

கணினி போய் 
மடிக்கணினி வந்ததே 

முதலும் முடிவுமாய் --.

கொத்து கொத்தாய் 
திராட்சை போல 
குழுவாய் திறிந்தோமே 
கல்லூரியில் அன்று ...

எவர் கண் பட்டதோ 
தேனீக்களின் கூட்டம் 
மற்றவரின் பார்வை ருசியிலே 
கறைந்துபோய்விட்டதே ,,,,

இன்று கல்லூரி நண்பர்கள் போய் 
அலுவலக சக ஊழியர்கள் உடன் நானும் 
என் பொறுப்புகளை தொடர்ந்து 
ஆசைகளை மறந்து 
லட்சியத்தை தொடங்கி 
என் பயணம் ஆரம்பமாகியதே!!!






செவ்வாய்




இயற்கையில் பெறப்பெற்ற  செயற்கை!!!








பறக்க தெரிந்த பறவைக்கு சிறகு உடைந்ததோ

துள்ளி திரியும் மானுக்கு பாதங்கள் நொண்டியானதோ

காலையில் கரையும் காக்கை இன்று மௌன அஞ்சலியோ

ஓடும் நதிகள் இன்று ஒரே இடத்தில்  கூட்டணி மறியலோ

மலைகள் நிற்க மறந்து நடராஜனிடம்

 ஒத்திகை நடனமிடுகின்றனவோ

சொல்ல தயக்கம் வந்தேன்

சொல்லிவிடவே வார்த்தைகள் எனக்கும் தடையாய்  ஆனதே

அவையால் நீ தடுமாறி தடமாறி இறந்துபோனயே

இயற்கையில் புகுந்த செயற்கை சிந்தனை....



நட்பிலோரு கண்ணாமூச்சி ஆட்டம் 





பட்டாம்பூச்சியின் இறகை போல

உந்தன் அரவணைப்பு சிறகுகலாய்

உன்வரிகளின் உணர்ச்சி வாக்க்கியங்கள் 

கன்னித்தீவு பெண்ணாய் நானே

நட்பிலோரு கண்ணாமூச்சியின்

ஆட்டமாய் நீயே (கண்ணை மூடி ஆடுகையிலே

ஒழிந்துபோனாயே ) பின்னரே அறிந்தது கனவு என்று



வெள்ளி


அனிதா MBBS கனவின் கல்லறை !!













உறங்க மாளிகை இல்லறமில்லை
குடிசை  ஓலை ஓட்டையே
போதுமென்றேன்
உடுக்க உடை இல்லை
கிழிந்த ஆடையை
தைத்து போத்திகொன்டேன்
பள்ளி பயில நல்ல
பள்ளிக்கூடமில்லை
மரத்தின் நிழலே
தஞ்சம் என்றேன்
உன்ன உணவின்றி
கால் வயிறு கஞ்சியை
பகிர்ந்து உண்டோம்
குடும்பத்தோடு
குளிக்க அறைகள் இல்லை
தென்னங்கீற்றிலே
குடிலிட்டு குளித்தேன்
உறங்குவதற்கு பஞ்சு
மெத்தை இல்லை
பழைய கிழிந்த
பாய் போதுமென்றேன்

இதனை பொறுத்து கொண்டும்
மூலதனத்தை உயிர் மூச்சாக்கி 
படித்தே ன்  மருத்துவ பட்டம் பெற 
மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சியடைந்தேன்

ஆ னாலும் மருத்துவராக
வேண்டுமென்ற
என் கனவினை சாம்பலாக்க
நீட் என்ற ஒரு தேர்வில்
தோற்றுப்போனேன்
என் இலட்சியத்தை 
தோல்வியடைந்தது
என் குற்றமா ?

படிப்பில் வேறுபாடுகளை 
புகுத்திய அரசின் குற்றமா?? 

வாழ்வில் முன்னேற இருந்த
ஒரு பாதை படிப்பதே ,
அவற்றிலும்
அனிதா MBBS-யின் 
ஆசை இன்று 

பெயரின்பின் தோல்வியின்
வெற்றிடமா ??


நிற்பதை பார்க்க இவ்வளவு காலம்
சிரமத்தை கண்டேன்,
இறந்த உடலாய்  இருப்பதை விட
இறந்து போய் உயிராய்
பல ஆத்மாக்கள் கனவை நிறைவேற்ற
என் இறப்பில் பலர் கனவு நிறைவாக
சில ஏழை எளியோர்  நெஞ்சங்களுக்கு
பாதை கிடைக்கும் என்று
நம்பிக்கையோடு செல்கிறேன் ,,,,






புதன்

காத்திருப்பு கவிமடல்
















நானாக நானிங்கு உனக்கு 
நீயாக நீயாகு எனக்கு
முதலா முடிவா
முடிவில்லா தொடரா
தொடரே முடிவோ ..

சாலையோரம் பூக்களுண்டு
பூக்களருகில் சந்ததிகளுமுண்டு

வான்மதி சோலையிலே
கதிரவன் மறந்துபோய்
கீழிறங்காமல் இரவில் உதிக்க
கதிரவனின் தவறினை
மறைக்க பகலில் நிலவும் 
தோன்ற காட்சிகளும் மாறிப்போக

மறித்து கொண்ட காற்றுகளும் 
அகிம்சைவழி மழையும் 
கடற்கரைநோக்கி ஒட்டக்கூட்டம் 
பாலைவனத்தை தேடி மீன்களும்

மாற்றங்கள் காரணம் விரைவிலே :)



ஏழ்மை தெரியாத வசந்தமழலை!!















மழலை பருவத்தில்
மாரியில் நனையும்
ஆசையை பெற்றோரையும்
ஏமாற்றி நனைந்த மகிழ்ச்சி
குடிசை ஓட்டைகளுக்கு
நன்றி (குறும்புமழலையின் வசந்தம்)


எனக்கே எனக்கா !!!!











எழுதுகோளின் துணைகொண்டு
முதன் முதலாய்
எனக்கென ஒரு கவிதீண்ட
எண்ணுகிறேன்
நாட்குறிப்பு தாளை
எடுக்க மறந்தபடியே ,,,

பெயரில் ஆரம்பமாகும்
என்நாமத்தோடே
சார்ந்தே என் சார்பேழுத்தான
எந்தன் துணை எழுத்து
என் தந்தை பெயரால் மட்டுமே,,,

எனக்கென ஒரு இணையே
தேடலில் தேடினேன்
இணை எழுத்தை
மறந்து போனது
எழுத்தோடு சேர்ந்த
எந்தன் எண்ணமும்
காற்றில் கறைந்துபோகும்
மேகமாய் மழை ,
எந்தன்  கனவும் நொடியில்
கரைந்தது காரணமின்றி :)




பெண்!!!!















எல்லோரும் அறிந்தது
நான் மட்டும் அறியாதது

எல்லோருக்கும் கிட்டியவை
எனக்கு மட்டும் கிட்டாத
எட்டா கனி

எட்டியும் எட்டாமலும்

எல்லோருக்கும் தெரிந்தவை
எனக்குமட்டும் தெரியாமல்மறைக்கப்பட்டவை

தெரிந்தும் தெரியாமலே,
கேட்காமலே கிடைத்தும் ,,
கிடைத்ததை தொலைத்துவிட்டேன் :)

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....