வெள்ளி

நட்பு எனப்படுவது யாதெனில்

 நண்பிகளுக்கு துணை..!!
நட்பின் இலக்கணம் அறியாப்பருவத்தில் 
கிடைத்த சோனியாவின் முதல் நட்பு  ..!!
நடைபெயர்ந்து படித்த பள்ளி பருவத்தில்  
என்புத்தகங்களை சுமைதாங்கிய 
இலக்கியா அக்காவின் நட்ப்பு ..!!
மிதிவண்டியில் ஏற்றக்கூடாதென கண்டிக்கும் 
அப்பாவின் கைகளால் பிடுங்கப்பட்ட 
இருக்கைகளை அவர் கரங்களே எனக்காக 
போடவைத்த கலைசெல்வியின் நட்ப்பு..
விடுதியில் பயிலும் எனக்கு மாதந்தோறும் 
 கடிதத்தில் நலம் விசாரிக்கும் 
சத்யாவின் நட்ப்பு.
இளங்களையில் கிடைத்த சொத்துகள் என் வித்யாவும் லோகியம்  சரண்யாயின் நட்பு, உலகை முழுமையாய் சுற்றிய திருப்தி 
எத்திராஜ் கல்லூரியின் நீங்கா  நினைவுகள்..!! 
முதுகலையில் ஒரு தீ,, ஹாம் கடலோர கவிதை ரேகாவின் பாச போரட்ட அன்புத்தொல்லைகள், அழகிய பொசசிவ் காட்சிகள் ,
 தெய்வானை திவ்யாவின் அன்பு அரவைணைப்புகள்,
பேபி  என்றே அழைப்பாள், அவளோடு நான் சென்ற candle light dinner, தியாகராய நகரை திரிந்து திரிந்து தின்பவர்களும் பொம்மைப்பொருட்களை வாங்குபவர்கள் நாங்கள்.
பணியில்  கிடைத்த லோபாவின் நட்ப்பு மொழிதெரியாமல் 
மழலையாய் தொடங்கினோம் நட்ப்பில் தொடங்கி சகியானவள் 
சகோதரியானால்,,,
அழைப்பில் செல்லக்குட்டி, அன்பில் அன்னைதெரேசா - பாக்கியா 
வரிகளில் முடிந்துவிடாத தொடர்கதை பயனாளிகள் என்றும்  
என்வாழ்வின் ஒலிக்கட்டிகள் இவர்களில் பலர் 

 

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....