அனிதா MBBS கனவின் கல்லறை !!
உறங்க மாளிகை இல்லறமில்லை
குடிசை ஓலை ஓட்டையே
போதுமென்றேன்
உடுக்க உடை இல்லை
கிழிந்த ஆடையை
தைத்து போத்திகொன்டேன்
பள்ளி பயில நல்ல
பள்ளிக்கூடமில்லை
மரத்தின் நிழலே
தஞ்சம் என்றேன்
உன்ன உணவின்றி
கால் வயிறு கஞ்சியை
பகிர்ந்து உண்டோம்
குடும்பத்தோடு
குளிக்க அறைகள் இல்லை
தென்னங்கீற்றிலே
குடிலிட்டு குளித்தேன்
உறங்குவதற்கு பஞ்சு
மெத்தை இல்லை
பழைய கிழிந்த
பாய் போதுமென்றேன்
இதனை பொறுத்து கொண்டும்
மூலதனத்தை உயிர் மூச்சாக்கி
படித்தே ன் மருத்துவ பட்டம் பெற
மதிப்பெண்ணும் பெற்று தேர்ச்சியடைந்தேன்
ஆ னாலும் மருத்துவராக
வேண்டுமென்ற
என் கனவினை சாம்பலாக்க
நீட் என்ற ஒரு தேர்வில்
தோற்றுப்போனேன்
என் இலட்சியத்தை
தோல்வியடைந்தது
என் குற்றமா ?
படிப்பில் வேறுபாடுகளை
புகுத்திய அரசின் குற்றமா??
வாழ்வில் முன்னேற இருந்த
ஒரு பாதை படிப்பதே ,
அவற்றிலும்
அனிதா MBBS-யின்
ஆசை இன்று
பெயரின்பின் தோல்வியின்
வெற்றிடமா ??
நிற்பதை பார்க்க இவ்வளவு காலம்
சிரமத்தை கண்டேன்,
இறந்த உடலாய் இருப்பதை விட
இறந்து போய் உயிராய்
பல ஆத்மாக்கள் கனவை நிறைவேற்ற
என் இறப்பில் பலர் கனவு நிறைவாக
சில ஏழை எளியோர் நெஞ்சங்களுக்கு
பாதை கிடைக்கும் என்று
நம்பிக்கையோடு செல்கிறேன் ,,,,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக