இயற்கையில் பெறப்பெற்ற செயற்கை!!!

பறக்க தெரிந்த பறவைக்கு சிறகு உடைந்ததோ
துள்ளி திரியும் மானுக்கு பாதங்கள் நொண்டியானதோ
காலையில் கரையும் காக்கை இன்று மௌன அஞ்சலியோ
ஓடும் நதிகள் இன்று ஒரே இடத்தில் கூட்டணி மறியலோ
மலைகள் நிற்க மறந்து நடராஜனிடம்
ஒத்திகை நடனமிடுகின்றனவோ
சொல்ல தயக்கம் வந்தேன்
சொல்லிவிடவே வார்த்தைகள் எனக்கும் தடையாய் ஆனதே
அவையால் நீ தடுமாறி தடமாறி இறந்துபோனயே
இயற்கையில் புகுந்த செயற்கை சிந்தனை....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக